பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழ் இலக்கிய வரலாறு

கல்வெட்டுச் சான்று

'மஹாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என்று சென்னை அரசாங்கக் காட்சிச் சாலையிலுள்ள சின்னமனூர்ச் செப்பேடுகள் குறிக்கின்றன.

கடல்கோள்

சங்க நூல்களில் பல, தமிழர்களின் கவனக்குறைவாலும் கடல்கோளாலும் அழிந்துபட்டன. குமரிக்கு அப்பாலும் பரந்திருந்த தமிழ்நாட்டின் எல்லை, தொல்காப்பியனார் காலத்தில் 'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' ஆனது.

'வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள'

என்ற சிலப்பதிகார அடிகளும்,

'மலிதிரை மூர்ந்து தன் மண்கடல் வௌவலின்

என்ற முல்லைக்கலித் தொடரும்,

'முந்நீர் விழவி நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே'

என்ற புறப்பாட்டின் பழைய உரைகாரர் குடுப்புரையும், சடல்கோள் நிகழ்ந்ததென்பதைத் தெரிவிக்கின்றன.

தொல்காப்பியம்

இன்று நமக்குக் கிடைக்கும் நூல்களில் மிகப் பழமையான நூல் தொல்காப்பியமாகும். இதன் ஆசிரியர் தொல்காப்பினார். தொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றி என்பதனால், அவர் குலப்பெயரே தன் பெயராகப் பெற்றார் என்பர். இவரை அகத்தியரின் பன்னிரு மாணாக்கருள் ஒருவர் என்பர்.