பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

தமிழ் இலக்கிய வரலாறு


தரை அழுகும் பறைச்சேரித்
தரைமெழுக வந்ததுரை
தரைக்குள்ளே போனதென்ன
தனித்தூக்கம் ஆனதென்ன
ஊர்க்கோடிச் சாவடியில்
ஒளிவிளக்கு எரிஞ்சாலும்
விழிவிளக்கு எரியலியே

வியாசர் கதை முடியலியே

என்ற பாடல் நாட்டுப்புறப் பாங்கில் அமைந்த ஒன்றாகும்.

'என்னுடைய கனவு பூமியின்' என்ற கவிதையில் நா. காமராசன் அவர்கள் பாடும் வயல்வெளிப் பாட்டும் நாட்டுப்புறப் பாங்கில் அமைந்ததுவேயாம்.

ஊரோரம் கிளிக்காடு
ஒவ்வொண்ணும் பஞ்சவர்ணம்
பஞ்சவர்ணக் கிளியுறங்கப்
பழத்தாலே கூடு செய்தோம்
பழத்தாலே கூடு செய்து
பவுர்ணமிப்பூ மெத்தையிட
கிழக்கே புயலடிக்க
கிளிச்சிறகு பறந்தோட
கிளியோ கிளி
பொலியோ பொலி

ஓ! பொலியோ பொலி.

புதுக் கவிதையில் இயற்கை

சங்க இலக்கியத்தில் இயற்கை என்பது பின்னணியாக அமைந்து அதன் மூலம் சில கருத்துகளைத் தெளியுமாறு அமைந்து கிடந்தது. கவிஞன் தன் பல்வேறு கருத்துகளை, நோக்கங்களை வெளிப்படுத்துவதற்காகவே இயற்கையைப் பயன்படுத்திய நிலை காணப்படுகிறது. இன்று புதுக்கவிதையில், எவ்வித நோக்கமும் இன்றி, இயற்கையிலுள்ள அழகை மட்டுமே சித்திரித்துக் காட்டுகின்ற நிலையில் இயற்கை