பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

344

தமிழ் இலக்கிய வரலாறு


என்ற கதையும், கடையெழு வள்ளல்களைப் பற்றிய தனித்தனிச் சிறுகதைகளும் அண்மைக்கால உயரிய அரிய படைப்புகளாகும்.

1980 ஆம் ஆண்டில் தமிழக அரசின் முதற்பரிசு. ஜெகசிற்பியனின் 'ஒரு பாரத புத்திரன்' என்னும் சிறுகதைத் தொகுதிக்கும், இரண்டாம் பரிசு மணிசேகரன் எழுதிய 'கோவியின் கதைகள்' என்னும் சிறுகதைத் தொகுதிக்கும் கிடைத்துள்ளன.

இன்று இத்துறையில் எண்ணற்றோர் சிறக்க எழுதி வருகின்றனர். ஸோமாஸ், சுபஸ்ரீ, ஸ்ரீரங்கம் நரசிம்மன், சுகி சுப்பிரமணியன் முதலிய பழம் பேரெழுத்தாளர்களோடு தாமரை மணாளன், ராஜேந்திரகுமார், புனிதன், இனியவன், ஜ. ரா. சுந்தரேசன், பூவை எஸ். ஆறுமுகம், டி. கே. பட்டுசாமி, சுஜாதா, ஆதவன், வண்ணநிலவன், வையவன், வே. சபா நாயகம், சு. சமுத்திரம், சுபா, அழகாபுரி அழகப்பன், பூமணி முதலியோர் இத் துறையில் முன்னேறி வருகின்றனர்.

சிறந்த சிறுகதைகள்

தற்காலத்தை 'சிறுகதைகளின் யுகம்' என்று சொல்வது மிகையாகாது. காப்பியத்தின் இடத்தை நாடகம் கைப்பற்றியது. நாடகத்தின் இடத்தை நாவல் பிடித்துக் கொண்டது. நாவலின் இடத்தைச் சிறுகதை கைப்பற்றிக் கொண்டது என்று கூறலாம். இலக்கியப் பிரிவுகளில் சிறுகதையே மிகுந்த செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.

இன்று தமிழகத்தில் ஐம்பதாயிரம் பிரதிகளுக்கு மேலே விற்பனையாகும் வார இதழ்கள் மட்டும் ஆறுக்கு மேலேயுள்ளன. இவற்றோடு மாத இதழ்கள். மாதம் இருமுறை இதழ்கள், நாளிதழ்களின் வாரமலர்கள் முதலியனவும் சிறுகதைகளைத் தவறாமல் வெளியிட்டுவருகின்றன. இவை அனைத்திலும் சேர்ந்து மிகக்குறைந்த அளவாகக் கணக்கிட்