பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



இக்காலம்

359


நாவல்), ராஜேந்திர குமாரின் 'வணக்கத்துக்குரிய காதலியே', வாலியின் 'அது அதில் இல்லை', கோமகளின் 'சுநாதங்கள்' முதலியன இக் குட்டி நாவல்களுள் சிறந்தவையாகும்.

தொடர்கதை எழுத்தாளர்கள்

தமிழகத்தில் இன்று வெளியாகும் நாவல்களில் பெரும்பாலானவை முதலில் தொடர் கதைகளாகப் பத்திரிகைகளில் இடம் பெறுபவையே. 1925 முதல் இன்றுவரை பத்திரிகை உலகைத் தம் தொடர்கதைகளால் - நாவல்களால் ஆளுமை கொண்டிருப்பவர்கள் சாண்டில்யன், கோவி.மணிசேகரன், புஷ்பா தங்கதுரை, சுஜாதா, லஷ்மி, சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி, வாஸந்தி ஆகியோர். லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, அனுராதா ரமணன், வாஸந்தி ஆகியோர் பெண் எழுத்தாளர்கள்; சுஜாதா, புஷ்பா தங்கதுரை பெண் பெயரில் புகுந்து கொண்டு எழுதும் ஆண் எழுத்தாளர்கள். எந்தப் பத்திரிகையை வேண்டுமானாலும் எடுத்துப் பாருங்கள். அதில் உறுதியாக இந் நால்வரில் ஒருவரின் தொடர் கதையைக் காணலாம். இவர்கள் நால்வருமே ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று தொடர்கதைகள் எழுதுபவர்கள். பத்திரிகை உலகினர் இவர்கள் பின்னே அலைகின்றனர் என்று கூறுமளவு மக்களிடை செல்வாக்குப் பெற்றவர்கள், இந்த நால்வர்.

சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன், குமுதத்தில் வெளிவந்த 'நைலான் கயிறு' என்னும் தொடர்கதை மூலம் புகழ்பெற்ற இவர், குறுகிய காலத்தில் நிறைய நாவல்களை எழுதியுள்ளார். இவரது நடை வித்தியாசமானதாக அமைந்திருப்பது ஒரு சிறப்பாகும். இவர் பெரும்பாலும் துப்பறியும் கதைகளையே எழுதி வருகிறார். ஆங்கிலத்தில் துப்பறியும் நாவல்களை வழங்கும் James Hadly chase இன் நடையையும் போக்கையும் இவர் நாவல்களில் காணலாம். எர்ல் ஸ்டேன்லி கார்டனர் என்னும் துப்பறியும் நாவலாசிரியர், பெர்ரி மேசன் என்னும் வழக்கறிஞரை உருவாக்சி அவர்