பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்க காலம்

35

தொல்காப்பியன்' என்ற தொடரைக்கொண்டு, தொல்காப்பியனார் பெளத்தர் அல்லது சமணர் என்பர். மகாவித்துவான் ரா.ராகவையங்கார், வேத வழக்கொடு பட்ட நெறியினர்'[1] என்பர். எனவே தொல்காப்பியனார் சமயத்தை வரையறுக்க இயலவில்லை.

தொல்காப்பியனார் காலம்

வடமொழியில் பாணினியின் காலம் கி.மு. நான்காம் நூற்றாண்டு என்பர். தொல்காப்பியனார் பதஞ்சலி முனிவருக்கு முற்பட்டவர் எனத் திரு. சீனிவாசப் பிள்ளையும்,[2] வேதகாலத்திற்கு முற்பட்டவர் என மறைமலையடிகளாரும், தொல்காப்பியம் வியாசர் வேதத்தைப் பகுத்ததற்குமுன் எழுந்தது[3] என்று டாக்டர் உ. வே. சாமிநாதய்யரும், தொல்காப்பியனார் கி.மு. 4ஆம் நூற்றாண்டினர் என்று சீனிவாச அய்யங்காரும் கூறுவர்.[4] எனவே, தொல் காப்பியனார் கிறித்து பிறப்பதற்கு ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் என்று கொள்வது பொருந்தும். இதனையே டாக்டர் கால்டுவெலும், 'இலக்கியப் பண்பாடு நிறைந்த பல நூற்றாண்டுகளுக்கு முன் தொல்காப்பியனார் தோன்றியிருக்க வேண்டும்.' என்பர்.[5] தொல்காப்பியனார்


  1. மகாவித்துவான் ரா. ராகவையங்கார், தமிழ் வரலாறு. ப. 283.
  2. திரு. கே. என். ஸ்ரீநிவாசப்பிள்ளை , தமிழ் வரலாறு, ப. 26.
  3. டாக்டர் உ. வே. சா. 'சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும். பக்கம். 14-18
  4. M. Srinivasa Iyengar, M. A. Tamil Studies, p. 8
  5. Whatever antiquity may be attributed to the Tolkappiam, it must have been preceded by many conturies of literary culture. It lays down rules for different kinds of poetical compositions which must have been deduced from the examples furnished by the best authors whose works were then in existence.
    - Dr. Caldwell