பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழ் இலக்கிய வரலாறு

கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்ட வராதல் இயலாதென்பது சிலருடைய கொள்கையாகும்.[1]

சங்க இலக்கியத்தின் பெற்றி

சங்கப் பாடல் தமிழ் இலக்கியப் பேழை: அழியாத கற்பனைக் கருவூலம்: கருத்து வளமும் கற்பனைச் சிறப்பும் பொருந்திய அழகான பாடல்கள் பலவற்றைப் பெற்று மிளிர்வன; ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழர் வாழ்ந்த வாழ்க்கையின் பெற்றியினை விளக்கி நிற்பன. வாழையடி வாழையாகத் தமிழ் மக்கள் பலமுறை பயின்று பயின்று படித்துப் பயன்பெறும் வற்றாத செல்வம் அது. புறத்தே தோன்றும் காட்சிகளையும் அகத்தே தோன்றும் கருத்துகளையும் புனைந்து நிற்கும் அழியாத அழகு ஓவியங்கள் அவை; நவில்தொறும் இன்பம் பயப்பன. அக்காலத் தமிழர் காதலையும் போரையும் தம்மிரு கண்களெனப் போற்றினர். 'காதலும் போரும் பழைய இலக்கியங்களின் கருத்தாகவும், சமயமும் தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், விஞ்ஞானமும் மனிதவியலும் இக்கால இலக்கியங்களின் பிரிவாகவும் அமைந்துள்ளன' என்று திரு. பூர்ணலிங்கம் பிள்ளையவர்கள் தம் நூலில் குறிப்பிடுகின்றார்.[2]

இவ்வாறு சங்க இலக்கியங்களாகிய பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் அகத்தையும் புறத்தையும் பாடுவன.

  1. வித்துவான் சு, வெள்ளைவாரணன், தமிழிலக்கிய வரலாறு தொல்காப்பியம். ப. 127.
  2. Love and war formed the themes of the ancient classics, and religion and philosophy of the medieval poems, as science and humanity predominate the modern writings.
    -M. S. Purnalingam Pillai, Tamil Literature, Introduction. p. 2