பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்சேர்க்கை

379


யவனர்கள் வாணிகம் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வந்தார்கள். அதனால் அவர்கள் சமயம், கலை, மொழி முதலியவற்றில் தலையிடவில்லை.

யவனர்களின் வாணிகத் தொடர்பு கி. பி. ஏழாம் நூற்றாண்டுவரை தொடர்ந்தது. அதன்பின் அராபிய நாட்டினரான இசுலாமியர் தமிழகத்தோடு வாணிகத் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் தரைவழியையும் கடல்வழியையும் தம் ஆதிக்கத்தில் கொண்டு வந்தனர். தம்மைத் தவிரப் பிறர் அவ்வழிகளில் வருவதை வன்முறை மூலம் தடுத்தனர். அதனால் யவனரின் தொடர்பு அறுபட்டது.

இசுலாமியர் இந்தியப் பொருள்களை ஐரோப்பிய நாடுகளில், ஒன்றுக்குப் பத்தாக விலையிட்டு விற்றுக் கொள்ளை லாபம் அடைந்தனர். இசுலாமியரிடம் செல்வம் குவிந்தது. ஐரோப்பியர் கடல்வழியே இந்தியாவுடன் நேரடியாய் வாணிகத் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால், இசுலாமியரின் கடலாதிக்கத்தை மீறி அவர்களால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. எனவே, இந்தியாவை அடையும் வேறு வழியைக் காணப் பலர் முயன்றனர்.

கொலம்பஸ் என்பார், ஸ்பெயின் நாட்டு அரசரின் உதவி பெற்று, இந்தியாவைக் காண மேற்குத் திசையில் பயணம் செய்தார். அவர் மேற்கிந்தியத் தீவுகளையும், புதிய உலகம் என வழங்கப்படும் அமெரிக்காவையும் கண்டு பிடித்தார். ஆனால் அவர் தாம் இந்தியாவைக் கண்டிபிடித்ததாகவே நம்பினார்.

கொலம்பஸ் புதிய நாட்டைக் கண்ட செய்தியை அறிந்த பிறகு, மேலும் பலர் கடல்வழியே இந்தியா செல்லும் புது வழி காண முயன்றனர். போர்ச்சுகல் நாட்டின் அரசரான இமானுவெல், ஆப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு கிழக்குத் திசையில் பயணம் செய்தால், இந்தியாவை அடையலாம் என்று நம்பினார். அதனால் அவர் வாஸ்கோ-டா காமா என்பவர்க்கு எல்லா வசதிகளை