பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பிற்சேர்க்கை

381


மிக எளிதில் இந்தியாவுக்கு வந்தனர். கி. பி. 1600 ஆம் ஆண்டு, 'ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி' நிறுவப்பட்டது.

நம் நாட்டுக்கு நான்காவதாக வந்த ஐரோப்பியர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த டேனிஷ்காரர்கள். இவர்கள் 1620 இல் 'கிழக்கிந்திய வாணிகக் கழகம்' ஏற்படுத்திக் கொண்டு நம் நாட்டுக்கு வந்தனர். பழவேற்காடு, தரங்கம்பாடி முதலிய பல இடங்களில் வாணிபம் செய்தனர். இவர்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியவில்லை. தம் வாணிக நிலையங்களை 16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கு விற்றுவிட்டுத் தம் நாட்டுக்குத் திரும்பினர்.

நம் நாட்டுக்கு வாணிகம் செய்ய இறுதியாக வந்த ஐரோப்பியர், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரெஞ்சுக்காரர்கள். இவர்களும் 1664 இல் 'பிரெஞ்சுக் கிழக்கிந்திய வாணிகக் கழகம்' ஏற்படுத்திக் கொண்டு நம் நாட்டுக்கு வந்தனர். புதுச்சேரி முதலிய இடங்களில் தம் வாணிப நிலையங்களை நிறுவிக்கொண்டனர்.

ஐந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஐரோப்பியர்கள் நம் நாட்டுக்கு வருகை தந்தனர். வாணிபம் அவர்கள் முதல் குறிக்கோளாக இருந்தாலும், அவர்கள் சமயம், மொழி, அரசியல் ஆகியவற்றிலும் தலையிட்டனர். ஆதிக்கம் செலுத்துவதில் ஐரோப்பியர்களுக்குள்ளே போட்டி ஏற்பட்டது. அவர்கள் உள்நாட்டு அரசர்களுடனும் சிற்றரசர்களுடனும் சேர்ந்து கொண்டு, ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட்டுத் தம் தலைமையை நிலை நாட்ட முயன்றனர். போர்க்சுக்கீசியர், டச்சுக்காரர்கள், டேனிஷ்காரர்கள் ஆகிய முத்திறத்தினரும் மிக விரைவில் தோல்வி கண்டு திரும்பிச் சென்றனர். ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர் ஆகிய இரு நாட்டவர் மட்டுமே பல்லாண்டுகள் பல போர்கள் செய்து தம் ஆதிக்கத்தைப் பரப்ப முயன்றனர். என்றாலும் முடிவில் ஆங்கிலேயரே வெற்றி பெற்றனர். கி.பி. 1784 இல்