பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

43


விளக்குவது; ஐந்து திணைகளையும் பாடியவர் இன்னார் என்பதை விளக்க ஒரு பழைய வெண்பாவைக் காட்டுவர்:

"மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன்
கருதுங் குறிஞ்சி கபிலன் - கருதிய
பாலையோத லாந்தை பனிமுல்லை பேயனே

நூலையோ தைங்குறு நூறு.”

இத் தொகை நூலைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் என்பதும், தொகுப்பித்தவர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்பதும் அறியக் கிடக்கின்றன.

உள்ளுறை, உவமை, இறைச்சி முதலிய நயங்கள் புலப்பட மருதத்திணையை ஓரம்போகியார் பாடுகிறார். நெய்தல் திணையைப் பாடவல்ல அம்மூவனார், நெய்தல் திணையில் கிழவற்குரைத்த பத்தில், தலைவியின் இனிமை விளங்க, அவளுடைய பேதைப் பருவத்து விளையாடல்களைச் சுவைபடக் கூறுகிறார். 'பொய்யா நாவிற் கபிலர்' குறிஞ்சி நில இயற்கைக் காட்சிகளைத் திறம்பட வருணிக்கிறார். தம் மனத்தில் அன்பாகவும் உயர்வாகவும் எண்ணுவோளின் இனிய பண்புகளை உள்ளுந்தோறும், பாலை வழியிற் செல்லும் கொடிய துன்பம் குறைந்து தோன்றும் என்பது பட, பல பாடல்களைப் பாலைத் திணையில் ஓதலாந்தை யார் பாடியுள்ளார். இறுதியில் முல்லைத் திணையைப் பாடியவர் பேயனார்.

ஐங்குறுநூற்றில் வாழ்வியலுக்கும் உலகியலுக்கும் இயைந்த பல நல்ல கருத்துகளைச் செய்விதின் காணலாம்.

"நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
விளைக வயலே வருக இரவலர்.

பால்பல ஊறுக பகடுபல சிறக்க,