பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

51


நிரை. முதல் நூற்றிருபது பாடல்களைக் கொண்டது. அடுத்த பகுதியான மணிமிடை பவளம், அடுத்த நூற்றெண்பது பாடல்களைக் கொண்டது. இறுதிப் பகுதியான நித்திலக்கோவை, இறுதி நூறு பாடல்களைக் கொண்டது. பாடிய புலவர் நூற்று நாற்பத்தைவர். சிற்றெல்லையாக 13 அடிகளையும், பேரெல்லையாக 31 அடிகளையும் இந்நூல் கொண்டுள்ளது. இந்நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி அக நானூற்றுப் பாடல்கள் ஓர் ஒழுங்கு முறையினை அடிப்படையாகக் கொண்டே கோக்கப்பட்டுள்ளன.

1, 3, 5, 7, 9 முதலான ஒற்றை எண்பெற்ற பாடல்கள் பாலைத் திணையாகவும், 2, 8, 12 முதலான (இரண்டும் எட்டுமான) எண் பெற்றவை குறிஞ்சித் திணையாகவும், 14 என நான்கை ஒட்டிய எண் பெற்றவை முல்லைத் திணையாகவும், 6, 16 முதனான ஆறு எண் பெற்றவை மருதத் திணையாகவும், 10, 20 எனப் பத்துகளாலாய எண் பெற்றவை நெய்தல் திணையாகவும் கோக்கப்பட்டுள்ளன.

பல அழகிய அகப் பாடல்களைக் கொண்டது அகநானூறு.

குழந்தையின் அழகினை வருணனைமுகத்தான் சங்க காலப் புலவர் பின் வருமாறு இனிதுற வடித்திருக்கக் காணலாம்.

'நாயுடை முதுநீர்க் கலித்த தாம ரைத்
தாதின் அல்லி அயலிதழ் புரையும்
மாசில் அங்கை மணிமருள் அவ்வாய்
நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வன்' - அகம் 9

'செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி

இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்து என