பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

53


கள் பாடியுள்ள 400 பாடல்களின் தொகுப்பே புறநானூறு ஆகும். அகவற்பாக்களால் அமைந்த நூல் இது. இந்நூலைத் தொகுத்தவர் பெயரும் தொகுப்பித்தோர் பெயரும் தெரியவில்லை. பாக்களில் அமைந்துள்ள அடிகளின் சிறுமை பெருமை எல்லைகளும் தெரியவில்லை. இதற்குப் புறம், புறப்பாட்டு என்னும் வேறு பெயர்களும் உண்டு.

வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என்ற புறப்பொருட் கருத்துகளைத் தழுவி அமைந்த செய்யுள்கள் கொண்ட நூல் இது. பண்டைத் தமிழ் நிலமாண்ட சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை மூவேந்தர்கள், சிற்றரசர்கள், வேளிர்கள், வீரர்கள் கடையெழு வள்ளல்கள், புலவர்கள், கொடை, மக்கள் வாழ்க்கை முறை, உணவு, உடை, நடை, முதலிய இன்னோரன்ன பல செய்திகளையும் நவிலும் வரலாற்றுப் பெரு நூலாகப் புறநானூறு திகழ்கின்றது. இந்நூலைத் தமிழர் வாழ்வின் பெற்றியைக் காட்டும் கண்ணாடி எனலாம். டாக்டர் போப்பு அவர்கள் தமிழ் இலக்கியத்தின்பால் ஈடுபட்டமைக்கு இந்நூல் ஒரு காரணமாகும். சில பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

பாரதப் போரில் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் போரிட்ட இரு கட்சிக்கும் சோறிட்டதாக, முரஞ்சியூர் முடிநாகராயர் புறம் இரண்டாம் பாடலில் பாடுகிறார். போரிலும் அறநெறியினைத் தமிழர் கடைப்பிடித்ததை நெட்டிமையார் என்னும் பெண்பாற் புலவர் பாடுகிறார்:

'ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன் போல் புதல் வர்ப் பெறாஅ தீரும்