பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சங்க காலம்

55


பத்துப்பாட்டு

'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து.'

என்ற பழஞ்செய்யுள் பத்துப்பாட்டு நூல்கள் இன்னின்னவை என்று தெரிவிக்கிறது. பத்துப்பாட்டின் சிறப்பு, 'ஆன்றோர் புகழ்ந்த அறிவினிற் றெரிந்து சான்றோருரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டும்' என்ற நச்சினார்க்கினியர் உரைச் சிறப்புப் பாயிரத்தால் தெரியவருகிறது. 'பாட்டும் தொகையும் கீழ்க்கணக்கும்' என்பதில், பாட்டு எனும் பத்துப் பாட்டே உரையாசிரியர்களால் முன் கூறப்படுவதாலும் அதன் சிறப்பு நன்கு புலனாகின்றது.

பத்துப் பாட்டினுள் அகப்பொருள் பற்றியன முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை என்பன. மற்ற ஏழு பாட்டுகள் புறப்பொருளைத் தழுவியன. அவற்றுள்ளும் ஐந்து பாட்டுகள் ஆற்றுப் படையினைச் சார்ந்தனவாகும். பரிசு பெற்றுத் திரும்புகின்ற பாணன், கூத்தன் முதலியோர், தாம் எதிர்ப்படுகின்ற தம் இனத்தைச் சார்ந்த இரவலனைத் தாம் பரிசில் பெற்ற வள்ளலிடம் வழிப்படுத்துதலே ஆற்றுப் படையாகும் (ஆறு = வழி;படை = படுத்துதல்). இதனை,

'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்

சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்'

என்பதால் அறியலாம். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை (மலைபடு கடாம், என்ற ஐந்து பாட்டுக்களும் ஆற்றுப்படைகளாகும். ஆற்றுப்படை என்ற