பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ் இலக்கிய வரலாறு


யும் கூறப்படுகின்றன. குன்றுதோறாடலில் குன்றிலே வாழும் குறவர்களின் வாழ்வு உணர்த்தப்படுகிறது. ஆறாவது படைவீடாகிய பழமுதிர்சோலையில் அடியவர்கள் மேற்கொள்ளவேண்டிய தவநெறியினையும், அவர்க்கு ஆறுமுகன் அருள் சுரக்கும் தன்மையினையும் ஆசிரியர் புலப்படுத்துகிறார்.

'உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு'

என்று உவமையோடு தொடங்கி,

'இழுமென இழிதரும் அருவிப்

பழமுதிர் சோலை மலைகிழ வோனே'

என்று அருவி பாயும் பழமுதிர்சோலையில் எழுந்தருளியிருக்கும் முருகனைச் சொல்லி முடிகிறது. இறுதியடிகளில் தமிழின் தனிச் சிறப்பெழுத்தாம் 'ழகரம்' இசை இனிமையை ஊட்டி நிற்கிறது.

திருமுருகாற்றுப்படையினை இயற்றியவர் நக்கீரர். இதற்கும் நெடுநல்வாடைக்கு இடையே சில தொடர்களில் ஒற்றுமை காணப்படுகின்றன.

பொருநராற்றுப்படை

இது, கரிகாற்பெருவளத்தானை முடத்தாமக் கண்ணி யார் பாடியது; பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெற விழையும் பொருநனை ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது இந்நூல். வஞ்சியடிகள் இடையிடையே வந்த ஆசிரியத்தான் இயன்ற 384 அடிகளை உடையது. பொருநர் எனும் சொல்லுக்கு வீரர் அல்லது மற்றொருவர் போல வேடம் கொள்வோர் என்று இரண்டு பொருள் கொள்ளலாம். ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர், பரணி