பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

தமிழ் இலக்கிய வரலாறு


'அன்னாய் நின்னொடு முன்னிலை யெவனோ
திரையிடு மணலினும் பலரே உரை செல

மலர் தலை யுலக மாண்டுகழிந் தோரே'

என்னும் அடிகளில் பல்வேறு நிலையாமையினை வற்புறுத்தி,

'அரிய தந்து குடி அகற்றி
பெரிய கற்று இசை விளக்கி
....................................
பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப, நாளும்

மகிழ்ந்தினிது உறைமதி, பெரும!'

என்று செந்நெறியாம் நன்னெறியினை இனிதுற எடுத்தியம்புகிறார் புலவர் மாங்குடி மருதனார்.

சிற்சில இடங்களில் வானநூற் குறிப்புகள் வருகின்றன. நெடுஞ்செழியனின் வீரத்திருவையும், வெற்றித்திறலையும் விளக்கமாகக் கூறுகிறார் ஆசிரியர். நாட்டு வளம், நல்ல போர் முறை, வேளாண்மை, வாணிக வளம் முதலியவற்றினைச் சிறப்பாகக் குறிக்கிறார் ஆசிரியர்.

மதுரை மாநகர வருணனை சிறப்புற்று விளங்குகிறது. 'ஆறு கிடந்தன்ன அகன்நெடுந் தெரு' விழாக்கோலம் பூண்டு விளங்குகிறது. எங்கும் இசையின் முழக்கம் எழுகின்றது. அந்தணர் பள்ளி, சைனப் பள்ளி, பௌத்தப் பள்ளி முதலியனவும் ஆண்டு உள்ளன.

இவ்வாறு மதுரை மாநகரத்தின் சிறப்பும், நில்லாமையை வற்புறுத்தும் காஞ்சித் திணையும் பெற்று மதுரைக் காஞ்சி சிறந்து விளங்குகிறது.

நெடுநல்வாடை

இது 188 அடிகள் கொண்ட அகவற்பாவால் அமைந்த நாலாகும். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்