பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

தமிழ் இலக்கிய வரலாறு


பெளத்த சமயப் புலவர்களும், தாமோதரனார் போன்ற வைணவ சமயப் புலவர்களும், நக்கீரனார் போன்ற சைவ சமயப் புலவர்களும் அக் காலத்தே வாழ்ந்துள்ளார்கள்.

தமிழ் மக்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடிப் பொருள் வளத்தினைப் பெருக்கினார்கள். காலிற் பிரிவதோடன்றிக் (வண்டி) கலத்தினும் (கப்பல்) பிரிந்தனர். யவனர்கள் தமிழ் நாட்டோடு கொண்டிருந்த தொடர்பு சங்க இலக்கியங்களில் பலவிடங்களில் பேசப்படுகின்றது. யவனர் பொன்னும் மதுவும் தந்து, முத்தும் மிளகும் கொண்டு சென்றனர்.

சங்க இலக்கியத்தில் நீதிக் கருத்துகள் பலவற்றினைக் காணலாம். இக் கருத்துகள் தமிழர்தம் நீதிபிறழாத நல்ல நெறியான வாழ்வினைக் காட்டுகின்றன. அவல ஓவியங்களை வடித்து நம் நெஞ்சைப் பிழிவதில் சங்கக் கவிஞர்கள் கைதேர்ந்தவர்கள். ஒன்பான் சுவையும் சங்க இலக்கியப் பேராற்றில் சுழியிட்டுக் கொப்புளித்தோடுவதைக் காணலாம்.

'வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே!'

என்னும் புறநானூற்று அடிகளில் அவலச் சுவையின் ஆழத்தினைக் காணலாம்.

சங்கக் கவிதைகள் கற்பனைவளம் செறிந்த கவிதைகள் என்பதைக் கண்டோம். பொருள்வயிற் பிரிந்தான் தலைவன். தலைவியிடம் அவன் திரும்பி வருவதாகச் சொன்ன கார்காலமோ வந்துவிட்டது. முல்லை அரும்புகள் தலைவியைப் பார்த்து நகைப்பது, கார்காலமே நகைப்பதுபோல் உள்ளது. அவ்வழகிய பாடலைக் காண்போம்.

'இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்

இவனும் வாரார் எவண ரோவெனப்

</poem>