பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சங்கம் மருவிய காலம்

89


இனியவை நாற்பது

இந் நூலாசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் ஆவர். இந்நூல் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உட்பட நாற்பத்தொரு வெண்பாவால் இயன்று, நீதிகளைப் புகட்டுவதாகும். ஒவ்வொரு பாடலிலும் இன்னது இன்னது இனியவை என்று இந்நூலாசிரியர் கூறுவதால் இந்நூல் இப்பெயர் பெற்றது.

எல்லாரும் மனத்துள் கொள்ளத் தகும் சிறந்த அறிவுரைகள் இந்நூலுள் காணப்படுகின்றன.

'ஒப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன்னினிது.' - 3

'மானம் அழிந்தபின் வாழாமை முன்னினிது'. - 14

'குழவி தளர்நடை காண்டல் இனிது'. - 15

'அறம் புரிந்து அல்லவை நீக்கல் இனிதே'. - 22

'வருவாய் அறிந்து வழங்கல் இனிதே'. - 23

இன்னா நாற்பது

இனியவை நாற்பதைப் போலவே கடவுள் வாழ்த்து உட்பட நாற்பத்தொரு வெண்பாக்களையுடைய நீதி நூலாய் இந்நூல் திகழ்கின்றது. இதன் ஒவ்வொரு பாடலும் இன்னது இன்னது துன்பம் தரும் என்று அறிவுறுத்துவதால், இந் நூலுக்கு இப்பெயர் வந்தது எனலாம். இந்நூலாசிரியர் கபிலர் என்று கூறப்படுகின்றார். 'கொழுந்துவை ஊன் சோறு' உண்டவர் சங்ககாலக் கபிலர். இவரோ, இக்