பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

தமிழ் இலக்கிய வரலாறு

பாண்டியனைப் பற்றிய செய்தியும், முந்நூற்று அறுபத் தொன்றாவது பாடலில் பாரி முல்லைக்குத் தேரீந்த செய்தி யும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்த செய்தியும், கூறப் பட்டிருக்கின்றன. சொற்சுருக்கமும் பொருள் ஆழமுடைத்தா தலுமான சிறப்புகள் இந் நூலில் காணப்படுகின்றன.

இதன் ஆசிரியர் முன்றுறையரையர் என்பவர். இவரை முன்றுறை என்று ஊரையாண்ட ஒரு குறுநில மன்னர் எனக் கொள்வர் சிலர். இவர் சமயம் சமண சமயமாகும். இவரது காலம் மதுரையில் வச்சிரநந்தி சங்கம் நிலவிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு என்பர். சிறுபஞ்ச மூலம் கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்தின் வேர்களும் மருந்துக்குப் பயன்படும். அம் மருந்து சிறு பஞ்சமூல மெனப்படும். அது போல இந் நூலின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடப்படும் ஐயைந்து அரிய பொருள்கள் வாழ்க்கையின் உயர்விற்குப் பயன்படும் எனலாம். எனவே இந்நூலுக்கு இப்பெயர் அமைந்தது. சிறப்புப் பாயிரத்தில் காணப்படும் இரண்டு செய்யுள்களைத் தவிர்த்து, இந்நூலில் நூற்றிரண்டு பாட்டுகள் உள்ளன. இந்நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். இவரைச் சமணர் என்று கூறினும், இவர் தம் நூலில் சமண சமயக் கருத்துகளைச் சிலவாகவும், சமயப் பொதுக் கருத்துகளை மிகுதியாகவும் கூறியுள்ளார். இந்நூலின் முப்பத்து மூன்றாம் பாடலில் உண்மைக் கவிஞனது பெற்றியினை விளக்குகிறார். 'மெய்யுணர்வு ஒன்றால் தான் வீட்டுப் பேற்றினை ஒருவன் எய்த இயலும்' என்று கூறுகிறார். 'தானத்தால் போகம் தவத்தால் சுகம் சுகமா ஞானத்தால் வீடாகும் நாட்டு' என்பது காண்க.