பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

97

சங்கம் மருவிய காலம் முதுமொழிக் காஞ்சி இந்நூலைப் பாடியவர் கூடலூர்கிழார் என்பவர். ஐங்குறு நூற்றினைத் தொகுத்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரே இவர் என்பர் ஒரு சிலர். குறட்டாழிசையால் இயற்றப்பெற்ற நூல் இது. பப்பத்துச் செய்யுள்கள் அடங்கிய பத்துப் பகுதிகளைக் கொண்டு இந்நூல் விளங்குகிறது. இவர் 'கல்வியிலும் ஒழுக்கமே மேற்பட்டது' என்று குறிப்பிடு கின்றார். 'ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலின் சிறந்தன் றொழுக்க முடைமை, - 17 'நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று.' - 1:6 'நசையிற் பெரியதோர் நல்குர வில்லை , 6:7 - 'இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.' 10:9 இவ்வாறான சிறந்த கருத்துகளை இந்நூலில் நாம் கண்டு இன்புறலாம். - 1 ஏலாதி --- ஏலம், இலவங்கப்பட்டை , நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய அறுவகைப் பொருளும் மருத்துவ அளவில் சேர்த்துச் செய்யப்பட்ட மருந்து ஏலாதி என்பர். அது உடலுக்கு வன்மை செய்வது போல, இந் நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஆறு பொருள்களும் உள்ளத்திற்கு உரமூட்டுவன என்பர். கடவுள் வாழ்த்துப் பாடலுடன் எண்பத்தொரு செய்யுள்கள் கொண்ட நூல் இது. இந்நூலாசிரியர் கணிமேதாவியார் என்பவர்.,