பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தமிழ் இலக்கிய வரலாறு தமிழகத்தில் நடத்திய போர்களையாதல் கடைச்சங்கப் புலவர்கள் தாம் இயற்றியுள்ள பாடல்களில் யாண்டும் கூறவில்லை. வட வேந்தரான மௌரியர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த செய்தியையும் முடியுடைத் தமிழ் - வேந்தர் மூவரும் தமிழ் நாட்டுக் குறுநில மன்னர்களும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டு ஆங்காங்கு நிகழ்த்திய போர்களையும் தம் பாடல்களில் குறித்துள்ள கடைச்சங்கப் புலவர்கள், பல்லவர் தமிழ்வேந்த ரோடு புரிந்த போர்களுள் ஒன்றையாவது குறிப்பிடாமை ஊன்றி நோக்கற்பாலதொன்றாம். அன்றியும், பல்லவர் என்ற பெயரே சங்கத்துச் சான்றோர் பாடல்களில் காணப்படவில்லை. இவற்றை யெல்லாம் நுணுகியாராயுங்கால், கி. பி. மூன்றாம் நூற்றாண்டி னிடையில் பல்லவர் தமிழகத்திற்கு வந்து காஞ்சியைக் கைப் பற்றுவதற்கு முன்னர் மதுரைமாநகரில் நிலவிய கடைச் சங்கம் முடிவெய்தியிருத்தல் வேண்டுமென்பது நன்கு வெளியாதல் காண்க. அன்றியும், கடைச்சங்கத் திறுதிக்காலத்தில் இயற்றப்பெற்ற சிலப்பதிகாரத்தில் இலங்கை வேந்தனாகிய கயவாகு என்பான் ஆசிரியர் இளங்கோவடிகளால் கூறப்பெற்றுள்ளனன். இவ்வடி களின் தமையனாகிய சேரன் செங்குட்டுவன் என்பவன், கடைச் சங்கப் புலவராகிய பரணரால் பதிற்றுப்பத்தினுள் ஒன்றாகிய ஐந்தாம் பத்தில் பாடப்பெற்றவன், இவன் தன் தலைநகராகிய வஞ்சியில் கட்டுவித்த கண்ணகிதேவியின் கோயிலுக்குக் கடவுண் மங்கலம் நிகழ்த்திய நாட்களில் இலங்கையரசனாகிய அக் கயவா கும் அங்கு வந்திருந்தான்.2 அவன் தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்ற பிறகு சேரன் செங்குட்டுவனைப்போல் பத்தினிதேவி யாகிய கண்ணகிக்கு அங்குக் கோயிலொன்று அமைத்து வழிபாடு 1. அகம். 69, 251, 281 ; புறம். 175. 2. சிலப்பதிகாரம், வாந் தருகாதை, அடிகள் 160-164.