பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 தமிழ் இலக்கிய வரலாறு சங்கம் அழிந்தொழிந்தது என்பதும் ஆராய்ச்சியறிவுடையோர் எவரும் ஒப்புக்கொள்ளத்தக்கதன்று. ஆனால், மதுரையில் பாண்டி வேந்தர்களின் பேராதரவினால் நிலைபெற்றுத் தமிழாராய்ச்சி செய்துவந்த கடைச்சங்கம் அழிவுற் றமைக்குத் தக்க காரணம் இல்லாமலில்லை. ஒரு நாட்டின்மேல் படையெடுத்துவந்து அதனைத் தம்மடிப்படுத்தும் , அயல் நாட்டார், வென்ற நாட்டின் மொழி, கலை, நாகரிகம் என்ப வற்றை இயன்றவரையில் அழித்தும் சிதைத்தும் விடுவதையே தம் முதற்கடமையாக மேற்கொள்வது வழக்கம் என்பது வரலாற்றாராய்ச்சியாளர் யாவரும் அறிந்ததோர் உண்மையாகும். அதனை உலகிலுள்ள பல நாடுகளின் வரலாறுகளும் உறுதிப் படுத்தி நிற்றல் உணரத்தக்கது. எனவே, ஏதிலார் படை யெழுச்சியொன்றால் பாண்டிநாட்டில் அத்தகைய நிலை யொன்று ஏற்பட்டு, அதனால் மதுரையிலிருந்த கடைச்சங்கமும் அழிவெய்தி யிருத்தல் வேண்டும் என்பது தேற்றம். அதற்கேற்ப, பிறமொழி யாளரான களப்பிரர் என்பார், பாண்டி நாட்டின் மேல் படை யெடுத்துவந்து, அதனைத் தொன்று தொட்டு ஆட்சிபுரிந்துவந்த - தமிழ் வேந்தர்களான பாண்டியரைப் போரில் வென்று, அவர்கள் நாட்டையும் கைப்பற்றி அரசாண்டனர் என்று வேள்விக்குடிச் --செப்பேடுகள் கூறுகின்றன.1 அன்னோர் ஆட்சியில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி முன் செய்திருந்த அறச் செயல் அழிக்கப்பட்டுப்போயிற்று என்றும் அச் செப்பேடுகள் அறிவிக்கின்றன. ஆகவே, களப்பிரர் படையெழுச்சியும் ஆட்சி -யும் பாண்டி நாட்டில் எத்துணையோ மாறுதலையும் புரட்சியையும் உண்டுபண்ணித் தமிழ்மொழி, தமிழ்க்கலை, தமிழர் நாகரிகம் ஆகியவற்றை வீழ்ச்சியுறச் செய்துவிட்டன என்பது அச்செப் பேடுகளால் நன்கறியக் கிடக்கின்றது. எனவே, கி. பி. மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த களப்பிரர் படை 1. Epigraphia Iadica, Vol. XVII, No. 16.