பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



கைந்நிலை 71 கம் வரையில் தோன்றியுள்ள பதினான்கு நூல்களைப் பற்றிய செய்திகளும் அந்நூல்களை இயற்றிய ஆகிரியன்மாரின் வரலாறு களும் ஒருவாறு விளக்கப்பட்டன. பதினெண் கீழ்க் கணக்கில் எஞ்சியுள்ள நூல்கள் திருக்குறள், களவழி நாற்பது, முது மொழிக்காஞ்சி, நாலடியார் ஆகிய நான்குமேயாம். அவற்றுள், திருக்குறள் கடைச்சங்க நாளில் கிறித்துவ ஆண்டு தோன்றுவ தற்கு முன்னே இயற்றப்பெற்றது என்பதும், கடைச்சங்கப் புலவர்களுள் சிலர் அந்நூற் சொற்பொருள்களைத் தம் பாடல் களில் அமைத்து அவ்வரிய நூலின்பால் தமக்குள்ள ஈடுபாட் டைப் புலப்படுத்தியுள்ளனர் என்பதும் ‘ கடைச்சங்க காலம்' என்ற பகுதியில் எடுத்துணர்த்தப்பட்டுள்ளன. களவழிநாற்பது என்ற நூலை இயற்றிய பொய்கையார் என்பார், கடைச்சங்கப் புலவருள் ஒருவர் என்பது புறநானூற்றி லுள்ள 48, 49-ஆம் பாடல்களாலும் நற்றிணையிலுள்ள 18-ஆம் பாடலாலும் நன்கறியப்படுகின்றது. அன்றியும், இப்புலவரால் சிறை மீட்கப்பெற்ற சேரன் கணைக்காலிரும் பொறையின் பாட லொன்று புறநானூற்றில் காணப்படுவதும் இவ்வுண்மையை உறுதிப்படுத்துவதாகும். எனவே, சோழன் செங்கணான் மீது இப்புலவர் பெருமான் பாடிய களவழி நாற்பதும் கடைச்சங்க காலத்து நூல் என்பது தேற்றம். ஒரு சாரார் சோழன் செங்க ணான் கடைச்சங்க காலத்திற்குப் பிற்பட்டவன் என்று கூறுவர். அவ்வேந்தற்கு நல்லடி என்ற புதல்வன் ஒருவன் இருந்தனன் என்பது அன்பிற் செப்பேடுகளால்2 அறியக் கிடக்கின்றது. அந் நல்லடியைக் குறிக்கும் பாடலொன்று,3 சங்கத் தொகை புறம். 74. Epigraphia Indica, Vol. XV, No, 5. (Anbil Plates of Sundara Chola.) " நற்றேர்க் கடும்பகட்டு யானைச்சோழர் மருகன் நெடுங்கதிர் நெல்லின் வல்லங் கிழவோன் நல்லடி யுள்ளா னாகவும் ஒல்லார் கதவ முயறலு முயல்ப' (அகம். 356, பரணர்.)