பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



16. திருமந்திரம் ஒவ்வொரு தந்தான் பது தந்திரங்க இந்நூல் இன இது மூவாயிரம் பாடல்களையுடையது ; சைவத்திருமுறை கள் பன்னிரண்டனுள் பத்தாந் திருமுறையாகத் திகழும் சிறப் புடையது. இஃது ஒன்பது தந்திரங்களாக வகுக்கப்பெற்றது. ஒவ்வொரு தந்திரமும் பல அதிகாரங்களைத் தன்னகத்துக் கொண் டது. இவ்வொன்பது தந்திரங்களிலும் இருநூற்று முப்பத் திரண்டு அதிகாரங்கள் உள்ளன. இந்நூல் கிடைத்த வரலாறு ஒன்று செவிவழிச் செய்தியாகத் தொன்றுதொட்டு வழங்கிவரு கின்றது. அது, திருஞான சம்பந்தர் திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வணங்கும் பொருட்டு அங்குச் சென்றபோது, திருக்கோயிலின் பலிபீடத்திற் கண்மையில் தமிழ்மணம் கமழ்தல் கண்டு அவ்விடத்தில் அகழ்ந்து பார்க்கும் படி செய்தலும், அதனடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்தது. திருமந்திர நூலாயிருத்தலையறிந்து பெருமகிழ்ச்சியுற்று இவ்வரிய நூலின் அருமை பெருமைகளை எடுத்துக்கூறி இது தமிழ் நாட்டில் யாண்டும் பரவி யாவர்க்கும் பயன்படுமாறு செய்தருளினர் என்ட தாம். இவ்வரலாற்றால் தமிழகத்தில் திருமந்திர நூல் ஒரு காலத் தில் கிடைக்காமற் போயிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு திருவாவடுதுறைக் கோயிலிலிருந்து ஒரு பிரதி திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்தில் கிடைத்திருத்தல் வேண்டும் என்பதும் நன்கு புலப்படுதல் காண்க. தமிழ் நாட்டில் ஏதிலாராகிய களப்பிரரின் ஆட்சி நடை பெற்ற காலப்பகுதியில் பல தமிழ் நூல்கள் அழிந்தும் அழிக்கட் பட்டும் போயின. அக்காலத்தில் தோன்றிய இத் திருமந்திர நூல் அழிந்துபோகாதவாறு செப்பேடுகளில் எழுதப்பெற்று ஒரு பேழையில் அடக்கஞ் செய்யப்பட்டுத் திருவாவடுதுறைத் திருக் கோயிலின் பலிபீடத்திற்கருகில் புதைத்துவைக்கப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதும், பிறகு தமிழ்வேந்தர் ஆட்சியின் கீழ் நாடு அமைதியெய்தியஞான்று திருஞான சம்பந்தப் பெருமானது பேரருள் திறத்தினால் இந்நூல் வெளிவந்து யாண்டும் பரவியிருத் தல் வேண்டும் என்பதும் நன்கு துணியப்படும். செவிவழிச்