பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109

சங்கர தாசு சுவாமிகள் சுமார் 40 நாடகங்களை எழுதினார். பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, வள்ளித் திருமணம், சதி சுலோசனா முதலியவை அவற்றுள் குறிப்பிடத்தக்கன.

பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மனோன்மணியம் என்னும் செய்யுள் நாடகத்தை இயற்றினார், மறைமலையடிகளார் காளிதாசன் சகுந்தலத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்தார். நாடகக் கலைஞர் எஸ். டி. சுந்தரம் ‘கவியின் கனவு’ எனும் நாடகத்தை எழுதி அதனைப் பல முறை நடிக்கவைத்தார்.

அறிஞர் அண்ணா வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி முதலிய பல நாடகங்களை எழுதினார். கலைஞர் கருணாநிதி மந்திரிகுமாரி, தூக்குமேடை, காகிதப்பூ முதலிய பல நாடகங்களை இயற்றினார். கிருஷ்ணமாமிப் பாவலர் பதிபக்தி; தேசியக் கொடி முதலிய நாடகங்களை எழுதிச் சுதந்திரப் போராட்டத்திற்கு வழிகோலினார்.

தமிழில் அங்கத நாடகங்களும் தோன்றின. சோவின் நாடகங்கள் அங்கதச்சுவை மிக்கன; பிறர் குறையைச் சுட்டிக்காட்டி எள்ளி நகையாடும் உரையாடல்கள் மிக்கன.

நாடக நடிகர்களுள் குறிப்பிடத் தக்கவர் நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன், அவ்வை டி. கே. சண்முகம், சகஸ்ரநாமம், மனோகர், சிவாஜிகணேர்ன், எம். ஆர். இராதா முதலியோராவர்.

சிறுகதை இலக்கியம்

நாவல் இலக்கியம் தோன்றி ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின்னரே தமிழகத்திற் சிறுகதை இலக்கியம் தோன்றியது. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரமா முனிவர் எழுதிய பரமார்த்த குரு கதை தமிழில் உரை