பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

பிள்ளை எழுதிய பண்டை நாளைச் சேர மன்னர் வரலாறும்" குறிப்பிடத்தக்க நூல்களாகும்.

தமிழில் திறனாய்வு நூல்கள்

இஃது இப்போது வளர்ந்து வரும் புதிய துறையாகும். கிரேக்கரே முதன்முதலாக இத் துறையைத் தொடங்கினர். அரிஸ்டாட்டில் தொடங்கி வைத்த திறனாய்வுக் கலையை ஹட்சன், வின்செஸ்டா, ஆபர்கிராம்பி, பிராட்லி, பெளரா, ஜான்சன் முதலிய ஆங்கிலப் புலவர்கள் வளர்த்தனர்.

தொல்காப்பியத்தை முதல் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூலாகக் கூறலாம், எழுத்ததிகாரத்தாலும் சொல்லதிகாாத்தாலும் மொழி நிலையைப் பற்றியும் பொருளதிகாரத்தால் அகப்பொருள், புறப்பொருள் மரபுகளையும் உவமையணியையும் செய்யுள் இலக்கணத்தையும் அது விளக்குகிறது.

பேராசிரியர் ஆ. முத்துசிவன் எழுதிய அசலும் நகலும், என்பதை முதல் தமிழ் இலக்கியத் திறனாய்வு நூலாகக் கூறலாம். அ. சா. ஞானசம்பந்தன் அவர்களின் இலக்கியக் கலையும், டாக்டர் மு. வ. வின் 'இலக்கிய ஆராய்ச்சி', 'இலக்கியத் திறன்' 'இலக்கிய மரபு' எனும் நூல்களும்தமிழிலுள்ள காவியம், நாடகம், சிறுகதை, நாவல் ஆகியவற்றைத் திறனாய்வு நோக்கோடு விளக்குகின்றன.

டாக்டர் சு. பாலச்சந்திரனின் ‘இலக்கியத் திறனாய்வு' என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட திறனாய்வு நூலாகும். அகிலனின் கதைக்கலை, மணவாளனின் அரிஸ்டாட்லின் கவிதையியல், டாக்டர் க. கைலாசபதியின் ‘இலக்கியமும் திறனாய்வும்’ இத் துறையில் எழுந்த பொதுத் திறனாய்வு நூல்களாகும்.