பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமாலுக்குரிய பாடல்கள் ஏழானாலும் திருமால் பலவாறு போற்றப்படுகிறார்.

‘தீயினுள் தெறல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ'

என்று திருமாலின் நிலை விளக்கப்படுகிறது. இவ்வடிகள் இறைவன் ' தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்' என்ற - பிரகலாதன் வாக்கிற்கு விளக்கமாக அமைந்துள்ளன.

பத்துப்பாட்டு

இதன் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக நீண்ட அளவின. அகப்பொருள் பாடல்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆற்றுப்படை

இதன் பாடல்களில் ஆற்றுப்படை நூல்கள் ஐந்துள்ளன . அவை புறப் பாடல்களாகும். வள்ளன்மைமிக்க மன்னிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் கலைஞன் ஒருவன். தனக்கெதிரே வரும் மற்றொரு கலைஞனைத் தனக்குப் பரிசில் தந்த மன்னனிடம் அவன் அருமை பெருமைகளைக் கூறி அவன்பால் அனுப்பி வைத்தல் ஆற்றுப்படை எனப்படும்.

1. திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப்போல முதலாவதாக அமைந்துள்ள பாடல் திருமுருகாற்றுப் படையாகும். இதனை ‘முருகு’ என்றும், ' புலவராற்றுப்படை' என்றும் அழைப்பர். 317 அடிகளைக் கொண்ட இப்பாடலி. ஆசிரியர் நக்கீரர்; சைவர் தம் பதினோராந் திருமுறையில் இஃது இடம் பெற்றுள்ளது. ' வீடு பேற்றை விரும்பும் ஓர்