பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

பார்ப்பார் வீட்டில் கோழியும் நாயும் புகுவதும், மனைவி அடங்காதிருப்பதும், கரையில்லாத புடவை உடுத்துவதும், உலகைக் காப்பாற்றாத வேந்தனும் இன்னாதவையாம்.

'பார்ப்பாரில் கோழியும் நாயும் புகலின்னா;
ஆர்த்த மனைவி யடங்காமை நன்கின்னா;
பாத்தில் புடவை யுடையின்னா;
ஆங்கின்னா காப்பாற்றா வேந்தன் உலகு .

5. கார் நாற்பது

இதன் ஆசிரியர் மதுரைக் கண்ணனார். காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு. இது முல்லைத் திணையைச் சார்ந்த அகப்பொருள் பற்றியதாகும். கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் அதன்படி வாராமையால் தலைவி வருந்தும் வருத்தத்தை இந்நூல் நன்கு விளக்குகிறது.

சென்ற நங் காதலர் சேணிகந்தா ரென்றெண்ணி
ஒன்றிய நோயோ டிடும்பை பலகூர
வென்றி முரசின் இரங்கி யெழில்வானம்
நின்று மிரங்கு மிவட்கு

கார்ப் பருவத்தைச் சிறப்பித்துக் கூறுவதால் இது கார்நாற்பது எனப் பெயர் பெற்றது.

6. களவழி நாற்பது

கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டனுள் போர்பற்றிய புறப்பொருள் நூல் இஃதொன்றே யாகும். இதன் ஆசிரியர் பொய்கையார் சங்க காலத்தவர். சோழன் செங்கணான் கழுமலம் என்னுமிடத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறையோடு மாறுபட்டுப் போர் புரிந்து வெற்றியடைந்தான். சோழனின் வெற்றியைப் புகழ்ந்து பாடிப்