பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பொய்கையார் சேரனைச் சிறையினின்றும் மீட்க முனைந்தார். அதற்குள் சேரன், சிறையில் தண்ணீர் பெறாது தடுமாறிப் பின்பெற்று, மானம் கருதி அதனை நிலத்தில் உகுத்து உயிர் நீத்தாள். சோழனது கழுமல வெற்றியை இந்நூல் விரிவாகப் பாராட்டுகிறது. இதன் நாற்பது வெண்பாக்களும் 'களத்து' என்ற சொல்லால் முடிகின்றன.

'அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கும்
இங்குலிகக் குன்றே போற்றோன்றும் -செங்கண்
வரிவரால் மீன்பிறழும் காவிரி நாடன்
பொருநரை யட்ட களத்து'

7. ஐந்திணை ஐம்பது

இதன் ஆசிரியர் மாறன் பொறையனார், இது முல்லை. குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைக்கும் முறையே பத்துப் பத்துப் பாடல்களாக ஐம்பது பாடல்களைக் கொண்டு விளங்கும் அகப்பொருள் நூலாகும். பாடல்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன. ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதவர் என்று இந்நூலினைப் புகழ்கிறது இதன் பாயிரம். காதலர் செல்லும் சுரநெறியில் உள்ள மான்களின் அன்புக் காட்சியை ஒரு பாடல் அழகாகக் காட்டுகிறது.

'சுனைவாய்ச் சிறு நீரை எய்யா தென் (று) எண்ணிப்
பிணைமான் ஊச்சும் சுரமென்பர் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி'

8. ஐந்திணை எழுபது

இதன் ஆசிரியர் மூவாதியார், இது திணைக்கு 14