பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்).pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

இஃது இவர் பாடிய தாலாட்டுப் பாடல்களுள் ஒன்று; இவர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டாகும்.

6. ஆண்டாள்

இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளாவர். திருமாலுக்குப் பூமாலை சூடிக் கொடுத்ததால் 'சூடிக்கொடுத்த சுடர் கொடி' என்னும் பெயர் பெற்றார், திருமாலையே மணம் புரிவேன் என இரவும் பகலும் ஏங்கி இறுதியில் திருவரங்கத்தில் அவரோடு இரண்டறக் கலந்தார். இவரை ஒரு கற்பனைப் பாத்திரம்' என்பர் சிலர். இவர் பாடியவை நாச்சியார் திருமொழியும், திருப்பாவையுமாகும், திருப்பாவை இன்றும் மக்களால் - பெரிதும் விரும்பிப் பயிலப்படுகிறது.

‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழி நான்,

இது இவரது காதல் மனத்தை அழகுறக் காட்டுவதாகும். இவரது காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு.

7. திருமங்கையாழ்வார்

நாலாயிர திவ்விய பிரபந்தத்துப் பாடல்களுள் மிகுதியானவற்றைப் பாடியவர் இவ்வாழ்வாரே. இவர் திருக்குறையலூரில் ‘நீலன்’ என்ற பெயரோடு பிறந்தார். பின்னர் மன்னனிடம் 'பரகாலன்' என்ற பெயரோடு சேனைத் தலைவராக இருந்தார்; ‘திருமங்கை' என்னும் பதியை ஆண்டு திருமங்கை மன்னன் என்ற பெயரைப் பெற்றார். குமுதவல்லி என்னும் மாதினை மணந்து, அவள் வேண்டுகோள்படி திருமாலடியார்க்குப் பெருந்தொண்டு புரிந்தார்; தம் கைப் பொருள் முழுவதையும் செலவழித்தபின்,