பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117


R. P. Constantio Josepho Beschio Societatis Jesu,

In Madurensi Regno Missionario.

என்னும்,விவரக் குறிப்பாலும், மேலும் இன்ன பிற வரலாற்று அகச் சான்றுகளாலும் தெள்ளிதின் அறியலாம்.

மேற்கூறிய சான்றுகளால், மதுரை வட்டத் தில் வாழ்ந்த வீரமாமுனிவரே, மதுரை வட்டத்துச் சொற்களையும் சேர்த்துத் தமிழ்-இலத்தின் அகராதி படைத்தார்; அந்த அகராதியே புதுச்சேரி பிரெஞ்சு கலேக்கழகத்தில் உள்ளது என்பது தெ வரி வு. ஆ ைல், கையெழுத்துப் படியாக உள்ள இந்த அகராதியில் உள் ள கையெழுத்து வீரமாமுனி வருடையதன்று. முனிவர் தம் கையால் எழுதிய படியைப் பார்த்துப் பலர் பல படிகள் எடுத்திருப்ப தாகத் தெரிகிறது. ஒரு படியைப் பார்த்து இன் ைெரு படி, அதைப் பார்த்து மற்றாெரு படி - என்று இப்படியாக, ஊர்தோறும் - கிறித்துவத் துறவியர் வாழ்ந்துவந்த வட்டாரந்தோறும் பல ப டி க ள் உருவெடுத்தன. அவ்வாறே, புதுச்சேரி திருப் பேரவையைச் சார்ந்திருந்த துறவி யொருவரும் ஒரு படி எடுத்துள்ளார். அந்தப் படியே (பிரதியே) இப்போது பிரெஞ்சு கலைக்கழகத்தில் இருப்பதாகும். இதற்கும் சான்று இல்லாமல் போகவில்லை.

இந்தப் புதுச்சேரிப் படியில் புதுச்சேரி வட் டாரச் சொற்கள் சி ல வு ம் காணப்படுவதால் -