பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


தொகுத்தவர், பாண்டிச்சேரியில் வாழ்ந்த வேற்று நாட்டார் ஒருவராகத்தானே இருக்கவேண்டும் ?

அடுத்து, புதுச்சேரி, பு து ைவ என்னும் சொற்கள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம், புதுவை Wid. புது (ச்) சேரி என்பதிலுள்ள Vid’ என்பதற்கு அல்லது என்பது பொருள்.

அடுத்தாற்போல் வாங்கு’ என்னும் சொல்லேக் கவனிக்கவேண்டும். இச்சொல்லுக்கு அகராதியில் இருபொருள்கள் தரப்பட்டுள்ளன. ஒன்று, pugio அதாவது குற்றுவாள்; இரண்டு, விசிப்பலகை. இரண்டாவதாகிய விசிப்பலகை என்னும் பொரு ளில் வாங்கு’ என்னும் சொல் புதுச்சேரியில் வழங் கப்படுகிறது. எங்கள் வீட்டிலும் எங்கள் உறவினர் வீடுகளிலும் விசிப்பலகையை வாங்கு’ எ ன் று கூறுவது மிகவும் பயின்ற (சர்வ சாதாரணமான) வழக்காகும். விசிப்பலகைக்கு வாங்கு’ என்னும் ப்ெயர் புதுச்சேரியில்மட்டும் எப்படி ஏற்பட்டது? புதுச்சேரிக்கு மிக அண்மையிலுள்ள கடலூரில் இந்த வழக்கு இல்லவே யில்லையே! -

விசிப்பலகை ஆங்கிலத்தில் Bench (பெஞ்ச்) எனப்படுகிறது; பிரெஞ்சு மொழியிலோ ‘Banc’ (பாங்க்) எனப்படுகிறது. இந்த Banc (பாங்க்) என் பதுதான் வாங்கு’ என மருவி வழங்கப்படுவதாகச் சிலரால் சொல்லப்படுகிறது. இந்த வாங்கு’ என் லும் சொல் ஒர் இருக்கை (ஆசனம்) என்னும் பொருளில் வேறு சில விடங்களில் வழங்கப்படுவ தாகவும் சொல்லப்படுகிறது. எது எப்படி யிருந்த