பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160


எனக் கருதப்படுகிறது. இந்நூல் முதலில் கிரேக்க மொழியிலும், அடுத்து இலத்தீன் மொழியிலும் எழுதப்பட்டது. பி ன் ன ர் இலத்தீனிலிருந்து இத்தாலி, செர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய ஐரோப்பிய மொ ழி க ளி ல் பெயர்க்கப்பட்டது. எனவே, இ லத் தி ன் பெரிபுளுசும் தமிழகத்தை உலகினர் அறியச்செய்யும் ஒரு பாலமாக அமைங் திருந்தது எனலாம்.

பெரிபுளுஸ் எழுதிய ஆசிரியர், நூலில் தமது ஊரையோ பேரையோ யாண்டும் வெளியிட்டா ரிலர். * இவரது காலம் கி. பி. 80-ஆக இருக்க லாம் என்பது ‘ஷாப் என்னும் அறிஞரின் கருத்து.

சீகன்பால்க் தமிழ் - இலத்தீன் பணி

சீகன்பால்க் என்பார் ஒரு செர்மானியர். இவர், டென்மார்க் நாட்டு மன்னர் நா லா ம் பிரடரிக் என்பவரால் கிறித்துவம் பரப்புவதற்காகத் தரங் கம்பாடிக்கு அனுப்பப்பட்டு 1706-ஆம் ஆண்டு குலத் திங்களில் வந்து இறங்கினர். அப்போது தரங்கம்பாடி டேனிஷ்காரரிடம் இருந்தது.

சமயத்தொண்டு புரியவந்த சீகன்பால்க், அத் தொண்டுடன், அரிதின் மு ய ன் று தமிழ்மொழி கற்றுத் தமிழ் பரப்பும் பணியும் புரி ய ல ா ைர். தமிழ் எழுத்துக்களைத் தாளில் எழுதிச் செர்மனி

  • V. Smith’s Early History of IndiaP. 245, IV Edn.