பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162


1742-ஆம் ஆண்டு ஆகும். இந்த அ. க ரா தி யை அடிப்படையாகக்கொண்டு, மேலும் சிலர் தமிழ்இலத்தீன் அகராதி தொகுத்துள்ளனர்.

இலத்தீன்-தமிழ் அகராதி

இலத்தின் சொல்லுக்கு நேரே தமிழ்ச் சொல் லால் பொருள் கூறும் இவ்வகராதியும் வீரமா முனிவர் தொகுத்ததே. இது கிடைக்கவில்லை. தமிழ்இலத்தீன் அகராதி தொகுக்கப் பெற்ற காலத்தை யொட்டியே இந்த அகராதியும் தொகுக்கப்பட் டிருக்கவேண்டும்.

போர்த்துகீசியம் - இலத்தீன் - தமிழ் அகராதி

முதலில் போர்த்துகீசியச் சொல்லை நிறுத்தி, இலத்தீன் சொல்லாலும் அதனையடுத்துத் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறும் இவ்வகராதியின் ஆசிரியரும் வீரமாமுனிவரே. காலம் 1744-ஆம் ஆண்டெனக் கருதப்படுகிறது. இந்த அகராதியால், இலத்தீன் அறிந்தவர்களே யன்றிப் போர்த்துகீசியம் அறிந்தவர்களும் தமிழ் கற்பதற்கும், தமிழ் அறிந்த வர்கள் அவ்விரு மொழிகளையும் க ற் ப த ற் கு ம் வாய்ப்பு உண்டு.

குரி தமிழ் - இலத்தீன் அகராதி

தமிழ்ச் சொல்லுக்கு இலத்தீன் சொல்லால் பொருள் கூறும் இந்த அகராதியின் ஆ சி ரிய ர்