பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176


புற்றேன். பிரெஞ்சு மொழியில் Mouroucane me donna un livre’ (முருகன் எனக்குக் கொடுத்தான் ஒரு சுவடி) எனச் சொற்றாெடர் அமைக்கப்படுவது ஈண்டு ஒப்புநோக்கற்பாலது. ஆங்கிலத்தில் தமிழ்ச் சொற்றாெடர் அமைப்புக்கு மாருக, பயனிலையாகிய வினே எழுவாயை யடுத்து இரண்டாவதாகவும், நான்காம் வேற்றுமை (Indirect Object) மூன்றாவ தாகவும், இரண்டாம் வே ற் று ைம ச் செயப்படு பொருள் (Direct object) நான்காவதாகவும் அமைக் திருக்கக் காண்கிருேம். ஆனல், தமிழின் வழி மொழிகளாகிய தென்னிந்திய மொழிகளிலே யன்றி, சம்சுகிருதம், அதன் வழிமொழிகளாகிய இந்தி முதலிய வட இந்திய மொழிகளிலும் தமிழ் போலவே சொற்றாெடர் அமைப்புமுறை யிருப்பது குறிப் பிடத்தக்கது. சில எடுத்துக் காட்டுக்கள் வருமாறு:

மலேயாளம்:

‘முருகன் எனக்கு ஒரு புஸ்தகம் தந்து ‘

| | | | | (முருகன் எனக்கு ஒரு சுவடி கொடுத்தான்)

கன்னடம்:

‘முருகா கனகே ஒந்து புஸ்தக கொட்டா.” | | | | t

(முருகன் எனக்கு ஒரு சுவடி கொடுத்தான்)

தெலுங்கு:

‘முருகடு நாகு ஒக புஸ்தகமு இச்செனு.’ | | | | |

(முருகன் எனக்கு ஒரு சுவடி கொடுத்தான்)