பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224


இவ்வாருகச் சில எழுத்துக்கள் ஒலிபெறுவ தில்லை. ஆங்கிலத்தினும் பிரெஞ்சு மொழியில்தான் ஊமை (Silent) எழுத்துக்கள் மிகுதி. பிரெஞ்சு நாட்டின் தலைநகராகிய பாரிஸ் - Paris’ என்னும் பெயரின் இறுதியிலுள்ள ‘S’ என்னும் எழுத்தை ஒலிக்காமல் பரி’ என்றே பிரெஞ்சு மக்கள் ஒலிப்பது வியப்பாயிருக்கிறது. இன்னும் கேட்டால், பிரெஞ்சு மொழியில் S, X, Z, என்னும் எழுத்துக்கள் சொற் களின் இறுதியில் வரும்போது பெரும்பாலும் ஒலி பெறுவதில்லை. எ. கா:

Pas = Lir; Deux = (33; Nez = G5, lo b pluh, chat = apr, mot = Guor, part = Luri, sport = ஸ்போர் - எனப் பல சொற்களின் இறுதியிலே ‘T’ ஒலி பெறுவதில்லை. இன்னும், trente = த்ரான்த், histoire = இஸ்துவார் எனச் சொல் இறுதியில் ‘e’ என்பதும் ஒலிபெறுவதில்லை.

இதில் ஒரு வியப்பு என்னவென்றால், எழுதும் போது, ஒலிபெரு ஊமை (Silent) எழுத்துக்களையும் விட்டுவிடாமல் எழுதித் தொ லே ப் பது தா ன். ‘கூழுக்கும் ஆசை - மீசைக்கும் ஆசை எ ன் ப து போல, ஒலிக்கவும் முடியவில்லை-எழுதாமல் விடவும் முடியவில்லை. முன்னாளில் எல்லா எழுத்துக்களுமே ஒலி பெற்றுத்தான் இருக்கும். ள ைட வி ல் சோம்பலால் ஒலிப்பு சுருங்கிவிட்டிருக்கிறது.

மேலுள்ளவாறு, ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் சில சொற்களில் சில எழுத்துக்கள் ஒலி பெறவில்லே