பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/233

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229


ஒரு சார்படைச் சொல்லைப் பெற்றே வரும். பெரும் பாலான பெயர்ச்சொற்கள் ஒரு சொற்றாெடரில் இன்றித் தனிச் சொல்லாகக் குறிக்கப் படி னு ம் Qps G60 Ftfuso_F QFr6 (Definite Article) பெற்றே நிற்கும். .

இங்கே ஆங்கிலச் சார்படை பற்றியும் பிரெஞ்சுச் சார்படை பற்றியும் இவ்வளவு கூறியது, இவ்விரு மொழிகளின் இனத்தைச் சேர்ந்ததும் இவற்றிற்கு முதன்மையானது மாகிய இலத்தின் மொழியில் சார்படைச் சொல்லே (Article) இல்லை என்பதை அறிவிப்பதற்கேயாம். பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் ‘le-la-les, the என்னும் சார்படைச் சொற்கள் கண்ட கண்ட விடங்களிலெல்லாம் வந்து மொழிக்கு வேண்டாத ஒரு சுமையாக இருக்கின்ற கிலேயில், தமிழ்போலவே இலத்தீனில் சார்படைச் சொற்கள் இல்லாமை குறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட்டு:

‘Rose” (ரோசா) என்பது ஆங்கிலச்சொல். இதன் முன் சார்படைச் சொற்கள் சேர்ந்தால் a rose, the rose எனவரும். Rosa என்பது அதே பொரு ளுடைய இலத்தீன் சொல்லாகும். இது, எந்த சார் படையும் தேவையின்றி வெற்றுபடியாயிருந்தே a rose, the rose என்னும் பொருளைத் தரும்.

Rosa = rose, a rose, the rose.

தமிழில் ஒரு, ஒர் என்பன இருப்பினும், தெளி வான சார்படைச்சொல் எனப்படும் Definite Article” தமிழிலும் இ ல த் தீ ன லு ம் இல்லாத ஒற்றுமைகிலே கினேவுகூரத்தக்கது.