பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலத்தின் மொழி

தமிழில் இலத்தீன் என அழைக்கப்படும் இம் மொழி, ஆங்கிலத்தில் Latin’ என எழுதப்பட்டு “லாட்டின்’ என ஒலிக்கப்படுகிறது. பி ெர ஞ் சு மொழியில் Latin எனவே எழுதப்பட்டு லத்தா(ன்)” என்று ஒலிக்கப்படுகிறது. ஆனால், தன் (இலத்தீன்) மொழியிலோ, Latino என எ ழு த ப் பட் டு ‘லத்தினே’ என்று ஒலிக்கப்படுகிறது.

இலத்தீன் உலகத்தின் பழைய மொழிகளில் ஒன்று; இந்தோ - ஐரோப்பியக் குடும்பத்தைச் சேர்ந்தது. பண்டு இத்தாலி நாட்டில் வழங்கிய மொழிகளுள் சிறந்தவை சில; அவற்றுள் தலையாயது இலத்தீன். டைபர்’ (Tyber) ஆற்றின் கரைப் பகுதிகளிலும் ரோம் நகரத்திலும் வா ம் ந் த ‘Latium என்னும் மக்கள் பேசிய மொழியே லத்தீன். Latium என்பதை ஆ ங் கி ல த் தி ல் லேஷியம் என ஒலித்தாலும், இலத்தீன் மொழி யில் லத்தியொம்’ என ஒலிக்கின்றனர்; எனவே, லத்தியொம் மக்களால் பேசப்பட்ட மொழி லத்தினே மொழியாயிற்று.

கி. மு. 90ஆம் ஆண்டளவில் ரோம் நகர மன்னர் வட்டாரத்திற்கும் இத்தாலி நாட்டு மக்கள் குழுவிற்குமிடையே ேபார் மூண்டது ‘சல்லா (Sula) என்னும் படைத்தலேவன் மன்னர்க்கு வெற்றி தேடித்தந்து இத்தாலி நாடு முழுதும் மன்னராட்சி வலுப்படுவதற்கு வழிசெய்தான். அன்று தொட்டு