பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்து ரை

‘மொழியாக்கச் செல்வர் உயர்திரு. ரா. தேசிகப்பிள்ளை, B. A., B. L., Officier d’Acadmie, ஓய்வு பெற்ற தமிழ் - பிரெஞ்சு ஆராய்ச்சித் துறைத் தலைவர், பிரெஞ்சி கிங்கழகம், புதுச்சேரி. உலகத்திற் சிறப் பு ற் று க் காணப்படும மொழிகள் சிலவற்றுள் தமிழ் மிகச் சிறந்த ஒரு மொழியாக மதிக்கப்படுகிறது. அஃது உயர்தனிச் .ெ ச ம் மொ ழி என்று பலராலும் பாராட்டப் பெறுகிறது. சொல்லாலும் பொ. ரு ளா லு ம் இனிமையும் நயமும் உடையது தமிழ். -

தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள், பண்டைக்காலம் முதல் இன்றுவரை தம் மொழியை உயிரினும் சி ற ப் பு ைடய தாக மதித்துப் போற்றி வருகின்றனர். தமிழின் உயர்வும் தமிழரின் பெருமையும் பிற நாட்டினர் மனத்தினைக் கவர்ந்தன. இ க்க வர் ச் சி அவர்களைத் தமிழ் நாட்டோடும் தமிழர்களோடும் தொடர்பு கொள்ளத் துாண்டிற்று என்னலாம். இத்துரண்டுதல் காரணமா கக் கடல் கடந்துவந்த பல நாட்டினர் தமிழின்பால் ஆர்வம் கொண்டு அதனைக் கற்கவும் அதனோடு தொடர்பு கொள்ளவும் முற்பட்டனர். அவர்களுள் இலத்தீன் மொழியை நன்கு கற்ற ஐரோப்பியர்கள் தமிழின் அருமை பெருமைகளை அறிந்து, இலத்தீன் மொழி வாயிலாகத் தமிழை ஐரோப்பியர்க்குக் கற்பிக்கும் முயற்சியையும் மேற்கொண்டனர்.

இலத்தீன் ெமா ழி ைய த் தாய்மொழியாகக் கொண்டு விளங்கிய மக்கள் இலத் தினர்’ என்று அழைக்கப்பட்டனர். அவர் க ள் இலத்தியோம்’ என்னும் நாட்டில் வசித்து வந்தனர். உரோமாபுரி மக்கள் அவர்களோடு தொடர்பு கொண்டவர்கள். சமயத் துறையில் அவர் க ளே ப் பின்பற்றிப் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.