பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46


கலைகளையும் மொழிகளையும் கற்றார், பதினெட்டாம் வயதில் (1698) கத்தோலிக்கத் திருப் பேரவையின் துறவுப் பயிற்சிக் கூடத்தில் சேர்ந்து பன்னிராண்டு பயின்று 1709-ஆம் ஆண்டு துறவுப் (குரு ) பட்டம் பெற்றார், இக்காலத்தில் துறவி பெஸ்கியவர்கள், இலத்தீன், இத்தாலியம், கிரேக்கம். ஈப்ரு, பிரெஞ்சு, போர்த்துகீசியம் முதலிய மொழிகளில் போதிய திறன் பெற்றிருந்தார். கல்வி க் கருவூலமாக விளங்கிய அடிகளார் பெஸ்கி, தென்னிந்தியாவில் கிறித்துவம் பரப்புவதற்காக 1710-ஆம் ஆண்டு கப்பலேறி 1711ஆம் ஆண்டு தென் பாண்டி நாடு வந்தடைந்தார்.

தமிழ் நாடு வந்த முனிவர் பெஸ்கி தமிழ்த் துறவியர் போலவே நடையுடை தோற்றம் கொண்டு ‘ வீரமா முனிவர் ‘ என அழைக்கப்பெற்றார், தைரிய நாதசுவாமி’ என்ற பெயர்வழக்கும் இவருக்கு உண்டு. கான்ஸ்டான்ஸ் ( Constance) என்ற இவரது இயற் பெயர் வீரம் - தைரியம் என்னும் பொருளுடையது; அப்பெயரின் அடிப்படையில் எழுந்த தமிழுருவமே வீரமாமுனிவர் என்னும் பெயர். Constantia என்னும் இலத்தின் சொல்லுக்கு, உறுதி, திடம், தைரியம், வீரம், ஊக்கம் என்றெல்லாம் பொருள் உண்டு.

வீரமாமுனிவர் நன்கு தமிழ் பயின்று ஆழ்ந்த புலமை யெய்தினர். மேலும், வடமொழி, தெலுங்கு, உருது ஆகிய மொழிகளும் பயின்றார். மேலே நாட்டி லிருந்து வந்து தமிழ் மக்களிடையே கிறித்துவம் பரப் பிய வீரமா முனிவர், அம்மக்களின் மொழியாகிய தமிழை உலகத்தில் பரப்பி உலகத் தமிழ் ஆக்க