பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51


முனிவர் முசே

இவரது முழுப்பெயர் லூயி மரி முசே (Louis Marie Mousset) என்பது. பிரான்சு நாட்டில் “புவாத்தியர் (Poitiers) என்னும் ஊரில் 1808 பிப்ரவரி ஏழாம் நாள் பிறந்த இவர், துறவுப் பட்டம் பெற்று, சமயப் பணி புரிவதற்காக, 1835 செப்டம் பர் இரண்டாம் நாள் புதுச்சேரி வந்து சேர்ந்தார். துய்புய் முனிவர் போலவே இவரும் சில ஊர்க் கோயில் பொறுப்பாளராகப் பணிபுரிந்ததுடன்,செங் தமிழைச் சிறக்கக் கற்றார், நூற்கள் சில எழுதினர்; துய்புயி அவர்களுடன் இணைந்து தமிழ்-பிரெஞ்சு அகராதி, பிரெஞ்சு-தமிழ் அகராதி, இலத்தீன்பிரெஞ்சு - தமிழ் அ. க ரா தி ஆகிய அகராதி நூற்கள் தொகுத்து வெளியிட்டார். இந்த நூற்களில் முசே பெயரே முதலில் குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த அகரவரிசை நூல் தொகுப்புப் பணிக்கு இவரே தலைமை தாங்கியிருக்கிறார் என்பது புலனாகிறது.

தமிழ்-இலத்தீன்-பிரெஞ்சுப் பாலம் அமைத்த முசே 1888 பிப்ரவரி எட்டாம் நாள் புதுவையில் இறுதியெய்தினர்.

ப ைட ப் பு க் க ள்

தமிழ்-இலத்தின் பாலம் அமைத்த பன்னட்டறி ஞரும் மிகவும் பாராட்டற்பாலர். அவர்தம் பணி யின் அருமை பெருமையினை அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்-இலத்தின் பாலமாக அவர்கள் படைத்துள்ள நூற்களைப் பற்றிய விவரங்களே இனி ஆராய்வோம். முதலில் வீரமாமுனிவர் நூற்களையும் அடுத்து ஏனையோர் நூற்களையும் காண்பாம்.