பக்கம்:தமிழ் இலத்தீன் பாலம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


செந்தமிழ் இலக்கணச் சுருக்கம்

செந்தமிழ் இலக்கணச் சுருக்கம் என்னும் நூலுக்கு வீரமாமுனிவர் இலத்தின் மொழியில்

“Compendium Grammatic De Elegantiori Lingu Tamulic Dialecto, Qaf Gug Dicta, Et Tamulic Poeseos Rudimentis.”

என்று பெயர் குறிப்பிட்டுள்ளார். இ ல த் தி ன் மொழியில் Compendium என்றால் சுருக்கம்’ என்று பொருளாம். இந்தச் செந்தமிழ் இலக்கணம்: 30 பக்கம் அளவு கொண்ட ஒரு சுருக்கமான நூல். இது, புதுச்சேரி மாதாகோயில் அச்சகத்தில் 1848-ஆம் ஆண்டு அச்சிடப் பெற்றது.

இச்சிறிய நூல் இரண்டு பாகங்கள் உடையது. முதல் பாகம் எழுத்திலக்கணம், சொல்லிலக்கணம் ஆகியவை பற்றியது. இரண்டாம் பாகம் யாப்பிலக் கணம் பற்றியது முதல் பாகத்தில் மூன்று பெரும் பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகளும், இரண்டாம் பாகத்தில் நான்கு பெரும் பிரிவுகளும் ஒவ்வொன்றிலும் பல உட்பிரிவுகளும் உள்ளன. இந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ள .ெ ச ய் தி க ளே அறிந்துகொள்ளும் வகையில், நூலில் கொடுக்கப் பட்டுள்ள பொருளடக்க அட்டவணை அப்படியே வருமாறு: