பக்கம்:தமிழ் உரை நடை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V முன்னைய உரையாசிரியர்கள் தொல்காப்பியர் காலத்தில் இருந்த உரை நடை எத்தகையது என்பது அறியக் கூடவில்லை. என்ருலும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் தங்கள் உரைகளே நன்கு எழுதி உள்ளமை காண்கிருேம். இறையனர் களவியல் உரையை அடுத்து இடைக்காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினர்கள். தமிழில் உள்ள இன்றைய உரை நடை பெரும்பாலும் அவ்வுரையாசிரியர் களாலேயே வளர்ச்சியடைந்தது என்பது உண்மை. பாட்டும் உரையும் கலந்து கின்ற சிலப்பதிகாரம் போலன்றிப் பாட்டுக்கே உரை வகுக்கும் முறையில் இவர்கள் உரைகள் அமைந்திருக்கின்றன. தொல்காப்பியச் குத்திரங்களுக்கும், பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், சிந்தாமணி போன்ற இலக்கியங்களுக்கும் பலர் உரை வகுத்துள்ளனர். அவ்வாறு எழுதப்பெற்ற உரைகள் அத்தனேயும் இன்று கிடைத்திருக்கின்றன என்று கொள்ள முடியாது. எத்தனையோ உரைகள் மறைந்தன. இன்று இருப்பன ஒரு சிலவே. தோன்றிய சங்க இலக்கியங்களுள் அழிந்தன போக எஞ்சி இருப்பன ஒரு சிலவாயின போன்று, எழுதிய உரை நூல்கள் எத்தனையோ இருக்க, அவற்றுள் ஒரு சிலவே இன்று வாழ்கின்றன. அவற்ருல் தமிழில் உரை நடை வளர்ந்த வகையினைக் காண்போம்: - தொல்காப்பிய இலக்கண நூலே எழுத்து, சொல், பொருள் என மூவகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். ஒவ் வொன்றிற்கும் அறிஞர்கள் உரை எழுதியுள்ளார்கள். மூன்று பகுதிகளுக்கும் உரை எழுதின ஆசிரியர்களும் 7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/106&oldid=874369" இலிருந்து மீள்விக்கப்பட்டது