பக்கம்:தமிழ் உரை நடை.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 தமிழ் உரை நடை இனி, இவ்வாறு உரை எழுதி உதவியவர்கள் காலத்தை ஒருவாறு காண இயலும். பத்தாம் நூற்ருண் டுக்குப் பின்னும் பதினைந்தாம் நூற்ருண்டுக்கு முன்னும் உள்ள இடைக்காலமே இவ்வுரையாசிரியர்களுள் பெரும் பான்மையோர் . ஏன் - அனைவருமே வாழ்ந்த காலம் என்னலாம். அக்காலத்தே தமிழ் நாட்டில் பிற்காலச் சோழர்தம் பேரரசு நிலைத்து வளர்ந்து நேரிய முறையில் ஆட்சி செலுத்தி வாழ்ந்தது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய ஆசிரியர்களுக்குள்ளே பழமையானவர் இளம்பூரணர் என்பவர். பின்னர் வந்த ஆசிரியர் யாவராலும் உரையாசிரியர் என்ற சிறப்புப் பெயரால் வழங்கப் பெறு பவர் இவ் விளம்பூரணரே என்பர் சிலர். சிலர் உரையா சிரியர் என வேறு ஒருவர் இருந்ததாகவும் கூறுவர். எப்படி யாயினும், இளம்பூரணர் காலத்தால் முந்தியவர் என்பது தவருகாது. கச்சினர்க்கினியர் காலத்தைப் பதின்ைகாம் நூற்ருண்டு என்பர். கல்லாடர் காலம் சற்று முந்தியதாய் இருக்கலாம். எட்டாம் ஒன்பதாம் நூற்ருண்டில் கல்லாடம் என்னும் பா.நூல் எழுதிய கல்லாடரே தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கும் உரை எழுதினரா, அன்றி அவர் வேரு என்பது தெரியவில்லை. எனினும் அவர் உரையே கிடைக்கவில்லையாதலின், அதுபற்றிக் கவலையுற வேண்டா. இவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் இளம்பூரணருக்கும் நச்சினர்க் கினியருக்கும் இடைப்பட்டகாலத்திலோ, அன்றிச் சற்று முன் பின்னகவோ வாழ்ந்திருக்கலாம் என்று கொள் வ்தில் தவறு இல்லை என எண்ணுகிறேன். தொல்காப்பிய உரையாசிரியர்களைத் தவிர்த்து ஏனைய உரையாசிரியருள் பெரும்பாலார் காலமும் அந்தக் காலமே எனக் கொள்வார்கள். சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அரும்பத உரையாசிரியர் அடியார்க்கு நல்லாருக்கு முற். பட்டவர் என்பதையும், அவ் வரும்பத உரைக்கு முன்பே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/109&oldid=874372" இலிருந்து மீள்விக்கப்பட்டது