பக்கம்:தமிழ் உரை நடை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தமிழ் உரை நடை பொருட்டு இயங்கி வந்ததேதோடன்றித் தமிழ் நாட்டு மன்னர்கள் கங்கைக் கரையில் உள்நாட்டில் வெற்றி" கொண்டும் கடாரம் முதலிய கீழை நாடுகள் வரை கொடி யேற்றியும் வாழ்ந்த காலமும் ஆகும். நாடு நல்ல சோழ மன்னரால் திறம்பெற ஆளப் பெற்ற அந்த நல்ல தமிழ் காட்டு வரலாற்றின் பொற்காலத்திலே இவ்வுரையாசிரியர் அனைவரும் சிறக்க வாழ்ந்து தமிழையும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தார்கள் என்பதில் வியப்பில்லேயன்ருே! இக்காலத்தில் உரைநடையிலும் பாட்டிலும் வட மொழி மிகுதியாகவே கலந்து வழங்கி வந்தது. அதன் அடிப்படையிலேதான் வடமொழி வழிக் கிரந்த எழுத்துக் களில் நாலாயிரத்துக்குப் படி'களாகிய பல உரைகள் எழுந்தன. அவற்றுடன் தொடர்புடைய ஆளவந்தார் பிள்ளை என்பவரே மேல் - நம் உரையாசிரியர்களுடன் சேர்க்கப்பெற்றவர் என்னலாம். அவரைப் பற்றியும் அவரு, டனும் அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்து காலா யிரத்துக்கு உரை கண்ட நல்லவரைப் பற்றியும் பின்வரும் பகுதிகளில் காணலாம். இனி இவ்வுரையாசிரியர்களுடைய சொற்களே எடுத்துக் காட்டி, அவரவர் உரைச் சிறப்புக்கள் எத்துணை ஏற்றமுடையன எனக் கண்டு: மேலே செல்லலாம். தொல்காப்பிய உரையாசிரியருள் இளம்பூரணரே மிகப் பழையவரெனப் போற்றக் கூடியவர் என்பது உலகறிக்த ஒன்று. அவரை உரையாசிரியர் என்றே வழங்கவேண்டு. மென்பர் பலர். ஏன்? பின்வந்த உரையாசிரியர் சிலர் அவ்வாறே அவரை வழங்கியு மிருக்கின்றனர். அவர் இவ்: வாறு உரையாசிரியர்களுள் முன்னேடியாய் (Pioneer) இருந்த போதிலும் அவர் உரைகள் இனிமையும் எளிமையும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/115&oldid=874379" இலிருந்து மீள்விக்கப்பட்டது