பக்கம்:தமிழ் உரை நடை.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தமிழ் உரை கடை போன்ற குற்றெழுத்துக்கள் தே, தோ போன்ற நெட்டெழுத் .துக்களுக்குப் பதிலாக எல்லாவிடங்களிலும் உபயோகப் பட்டு வந்துள்ளதைக் காண்கிருேம். இதைத் தவறு எனக் கொள்ளலாம் என்ருலும், ஆண்டு எய்தும் எகரம் ஒகரம் மெய்ப்புள்ளி என்ற நன்னூல் குத்திரப்படி குறிலுக்கு எகர ஒகர உயிர் எழுத்தின்மேல் புள்ளி இட்டும் நெடிலே அவ்வாறு புள்ளியிடாது எழுதியும் இரண்டுக்கும் ஒரே கொம்பை ()ெ உபயோகித்தும் வந்தார்கள் என்பது தெரி கின்றபடியால், அதன்படி இது தவறு அன்று என்றும் சொல்லலாம். ஒரு நூற்ருண்டுக்கு முன் வந்த அச்சு நூல் நூல்களிலுங்கூட இந்த வேறுபாடு இருக்கக் காண்கிருேம். என்ருலும், பிற தவறுகளைக் காணும்போது எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற பழமொழி எவ்வளவு மெய்யாய் இருக்கிறது என நினைக்கத் தோன்றுகிறது. " ற் க் போன்ற தவறுகளும் யெழுதி எனச் சொல் தொடங்கும் தவறுகளும், செயிதருளி என்பன போன்ற பிழைகளும், சிலையுலெயும் போன்ற தவறுகளும் "கெளுத்து போன்ற தவறுகளும் இன்னும் பலவும் காண்கின்றன. சிறந்த தமிழ்ப் புலவர்கள் வாழ்ந்த பிற் காலப் பெருஞ்சோழர் ஆட்சியில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்களில் இத்தகைய தவறுகள் காண்பது பொறுக்கமுடியாத ஒன்றன்ருே பரிமேலழகரும், சேன வரையரும், இளம்பூரணரும், நச்சினர்க்கினியரும் நல்ல தமிழில் ஒருபுறம் செம்மைத் தமிழ் கலம் ஓம்பிய காலத் .திலேயா இத்தகைய தவறுபட்ட உரை நடை தோன் றிற்று' என எண்ணத் தோன்றுகிறது. ஆனல், இவற்றை வெளியிட்ட திரு. சுப்பிரமணியம் அவர்கள் கூறியவாறு, இத்தவறுகளெல்லாம் இவற்றைச் செதுக் கிய கல்வியறிவில்லாத கல்லுளித் தொழிலாளியாலும், படியெடுத்தவர்களாலும், காலப் போக்கில் சில சில எழுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/149&oldid=874417" இலிருந்து மீள்விக்கப்பட்டது