பக்கம்:தமிழ் உரை நடை.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டுக்கள் - 14博 துக்கள் கெட்டமையாலும் நேர்ந்த பிழைகள் என்பதை ஆய்பவர் நன்கு உணர்வார் அல்லரோ நாட்டில் எத் தனையோ வாணிப நிலையங்களில் அறியா மக்கள் தவறு. தலாகப் பல சொற்களைப் பயன்படுத்துவதைக் காண் கிருேமே! கதவைத் திரக்க என்றும், வரக் கோறு: கிருேம் ' என்றும் பலப்பல விதமாகத் தமிழ்க் கொலை செய்யும் நாள் நம் நாள் அல்லவா ? வெறும்பலகை களிலும் பத்திரிகைகளிலும் எழுதும் விளம்பரங்களே இவ்வாருயின், கற்சுவர்களில், கல்வியே அறியாத-சில: வேளைகளில் தமிழே தாய் மொழியல்லாத-கல் தச்சர் களேக் கொண்டு பொறிக்கப்பெறும் உரை நடை எப்படி அமையும்? ஒரு முறை கல்லில் செதுக்கிவிட்டவற்றைப் பின்னர் அழித்து வேறு எழுதவும் இயலாது என்பதறி. வோம். எனவே, அறிஞர்கள், எழுதிய பின் இத்தகைய பிழைகளைக் கண்ட போதும், செய்வதறியாது சிந்தை. தடுமாறியிருப்பார்கள். அதற்காக அழகிய கோயில்களையே இடித்துத் தள்ள முடியுமா? இப்படியே படி எடுப்பவர் கள்-படி எடுப்பது எப்படி என்பதே தெரியாத அந்தப் பழங்காலத்தில் படி எடுப்பவர்கள்-எப்படியாவது எடுத். தால் போதும் என்று எடுத்து வைத்துவிட்டிருப்பார்கள். எனவே, இவ்வாறு பல வகையில் பிழைகள் நேர்ந்து. விட்டன. எனினும் அப்பிழைகளையெல்லாம் நீக்கி, செப்பம் செய்து, நல்ல தமிழில் எழுதுவோமானல், இக்கல்வெட்டு: உரை நடை சிறந்த உரை நடையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இவ்வுரை நடையில் வடமொழிச் சொற்கள் அதிகம் கலந்திருக்கக் காண்கிருேம். அவ்வட. மொழிச் சேர்க்கையும் முன் உள்ள மெய்க்கீர்த்திகளைக் காட்டிலும் பின்னுள்ள உரை நடையிலேயே அதிகம். பரவியுள்ளன. அக்காலம், வடசொற்களே அதிகமாகக் கலந்துபேசினும் எழுதினும் பெருமதிப்பு இருந்த காலம் போலும்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/150&oldid=874419" இலிருந்து மீள்விக்கப்பட்டது