பக்கம்:தமிழ் உரை நடை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

VIII பிற்கால உரையாசிரியர்கள் பதின்ைகாம் நூற்றண்டிற்குப் பின் மேலே கண்ட கல் வெட்டுக்களோ, பேரிலக்கிய இலக்கண உரை நூல் களே அதிகமாக வளரவில்லை என்னலாம். தமிழ் இலக் கியத்தில் அதற்கு முன் வடமொழி அதிகமாக புகுந்ததைத் "தமிழும் வடமொழியும்' என்ற தலைப்பிலே கண்டோம். இந்தப் பதின்ைகாம் நூற்ருண்டிற்குப் பின் நேர்ந்த நாட்டு மாறுபாடுகளால் வடமொழியாளரோடு முகலாயர் ஆட்சி யாலும் பின் வந்த ஆங்கிலேயர் ஆட்சியாலும் தமிழ் இலக்கியத்துறையிலும் மாறுபாடுகள் தோன் றி ன என்னலாம். கிறித்துவ மகமதிய சமய நெறிகள் மேலேக் கடற்கரை வழியாகப் பழங்காலத்திலேயே தமிழ் நாட்டில் கால் கொண்டிருந்தன என்ருலும், அவை இரண்டும் அவ்வளவாக வளரவில்லை என்னலாம். பின் தமிழக ஆட்சி அச்சமயங்களைச் சேர்ந்தோர் கைகளில் மாறிய காலத்திலேதான் அவை நம் நாட்டில் அதிகமாகப் பரவலாயின. அப்பரவலுக்கு ஏற்ற வகையிலே அவ்வச் சமயங்கள் பற்றிய நூல்களும் வெளிவந்தன என்னலாம், ஆனல், அதே வேளையில் தமிழ் நாட்டில் பழஞ்சமயங்களாய் இருந்த சைவ வைணவ சமயங்களிலும் பலபெரியவர்கள் தோன்றிப்பாட்டிசைத்தும் உரை எழுதியும் சமயத்தையும் தமிழையும் ஒருங்கே வளர்த்தார்கள் என்று கொள்ளுவது பொருத்தமாகும். சென்ற இரண்டொரு நூற்ருண்டு களிலே மேலே நாட்டார் தமிழ் மொழிக்கு - சிறப்பாக உரை நடை வளர்ச்சிக்குப் - பாடுபட்டார்கள் எனக் காண். கின்ருேம். அதே காலத்திலும் அதற்கு இரண்டொரு நூற்ருண்டுகளிலும் தமிழ் நாட்டில் உரைநடை வளர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/173&oldid=874444" இலிருந்து மீள்விக்கப்பட்டது