பக்கம்:தமிழ் உரை நடை.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்கால உரையாசிரியர்கள் - 173: எனவே, ஐந்திரம் முதல் நூல் என்று அமைந்தி ருப்ப, முந்து நூல் கண்டு எனக் கூறியது எற்றுக்கு எனவும் கூறி மறுக்க. ', 'அற்றேல், ஐகாரக் குறுக்கம் மொழி இடை கடைகள் என்னும் இடம் காரணமாகக் குறுகி. இசைப்பது போலக் குற்றிய லிகர குற்றிய லுகரங் களும் இடமும் பற்றுக்கோடும் காரணமாகக் குறுகி. இசைத்தலின் இவற்றை இயல்பு என்றது என்ன?” எனின் அறியாது கடாயினய். அவை"காரணமாகக் குறுகி இசைப்பனவாயின், இங்கு, ஏது. தாது என்னும் வடமொழி இறுதி உகரமும் அவ்விடமும் பற்றுக் கோடும் உடைமையின் அவை காரணமாகக் குறுகி இசைத்தல் வேண்டும், காரணம் உள்வழிக் காரியம் உண்டாதல் ஒகுதலையாகலின்; அங்ங்ணம். இசையாமையின், இடமும் பற்றுக் கோடும் குற்றியல் லிகர குற்றியலுகரங்கள் நிற்றற்குச் சார்பு. ஆவனவே யன்றி, குறுகி இ ைச த் த ற் கு க் காரணம் ஆகா எனக்கொள்க 'அஃதேல், வடமொழியின் அறுவகை யிடமும், வல்லெழுத்துப்பற்றுக் கோடும் குற்றியலுகரத்திற்குச் சார்பு ஆகா மையின், இலக்கண வழுவாம்;பிற எனின், ஆகாது; 'குற்றியலுகரம் இடமும் பற்றுக்கோடும் சார்ந்து அன்றி நில்லாது என்றது அல்லது, இடமும் பற்றுக்' கோடும் குற்றியல் உகரத்திற்குச் சார்பாய் அல்லது வாரா என்னும் யாப்புறவு இன்மையின். குற்றியல் உகரம் தமிழ்ச் சிறப்பெழுத்தாகலின், வடமொழி' யின் வாராது ஆயிற்று. இக்குற்றியல் இகரக் குற்றியல் உகர உண்மை அறியாத உரையாசிரியர், இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே ' என்றதற்கு இடைப்படினும் குறுகும் என உம்மையை மாற்றி, இறந்தது தழிஇயிற்று ஆக்கு, 1. தொல் - பாயிரவிருத்தி-பக். 8.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/182&oldid=874454" இலிருந்து மீள்விக்கப்பட்டது