பக்கம்:தமிழ் உரை நடை.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 தமிழ்உரை நடை வர். அஃது ஆசிரியர் கருத்தொடு முரணும் என்பது இக்கூற்ருன் அறிக. இன்னும், 'புணர்ச்சி வேற்றுமை பற்றி வேறு ஆயிற்று என்பார்க்குக் களவு, கனவு முதலியனவற்று உகரமும் புணர்ச்சி வேறுபட்டுக் குற்றியல் உகரத்திற்கு உரிய விதி முழுவதும் பெறு தலின், அதனையும் குற்றியலுகரம் எனக் கோடல் வேண்டும்: அ வ் வா று கொள்ளாமையின், அவர்க்கும் அது கருத்தன்று என மறுக்க. இவ்வாறு இலக்கணப் புலமை நிரம்பிய சிவஞான முனிவர் சமயத்துறையிலும் தருக்க முறையிலும் சிறந்த புலமை பெற்றவர் என்பதை இவர் சிவஞான போதத் துக்கு எழுதிய 'பாடியம்' என்கிற உரை நன்கு எடுத்துக் காட்டும். அது 'திராவிட மாபாடியம் என்னும் பெயருடன் உலக வழக்கில் வழங்குவது ஒன்றே தமிழில் அது போன்ற வேறு உரை இல்லே என்பதை நன்கு எடுத்துக் காட்டும். மெய்கண்ட தேவர் எழுதிய மூன்று நான்கு அடிக ளாலாகிய பன்னிரண்டு சூத்திரங்களுக்கு அத்துணை விளக்க மாக உரை எழுத வல்ல திறன் சிவஞான முனிவருக்கே கைவரப் பெற்ற திறன் என்பதை அப்பாடியத்தை ஆராய்வார் நன்கு உணர்வர். சைவ சித்தாந்தத்தின் நுண்ணிய கருத்துக்களைக் காட்டும் கிலேயும், அதை மறுப்பாரை மறுக்கும் திறனும், பிற எடுத்துக்காட்டுக்களும் அதைப் பயில்வாரே நன்கு அறிவர். இங்கு இரண் டொன்று காணல் நலம் பயப்பபதாகும்: 'மறைப்பாவது, அநாதியாய மூல மலத்தின் காரியமாகலின், அது முதல்வற்ை செய்யப்படுங் காரியமென்பது என்னையெனின், கூறுதும்-முதல்வ வைான் முற்றுணர்வுடைமையின், உலகத்துயிர்கள் படுந்துன்ப முழு வ தும் உணர்ந்தோனகியும், 1. முதற்குத்திர விருத்தி, பக் 38, 39.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/183&oldid=874455" இலிருந்து மீள்விக்கப்பட்டது