பக்கம்:தமிழ் உரை நடை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தமிழ் உரை கடை முதலிய எழுதுவதற்கு காவலர் தம். பெரிய புராண வசனம்" என்னும் நூல் வழிகாட்டியாய் உள்ளதெனத் திரு. செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். நாவலர் இவ்வாறு பெரிய புராணம், திருவிளையாடற்புராணம் முதலியவற்றை உரைநடை யாக்கி யுள்ளார்; மற்றும் சிறுவர்களுக்குப் பயன்படக்கூடிய பால பாடம், சைவ வி ைவிடை போன்றன இவர் தம் உரை நடை நூல்களாகும். இவை அனைத்தும் சைவ சம்பந்த மான நூல்களாய் அமைந்த காரணத்தால், பிறரால் நன்கு பயிலப்படாதனவாக அமைந்து விட்டன என்னலாம். ைச வர் க ளு க் குள்ளும் சமயப் பற்றுள்ளவர்களுங்கூட முதல் நூலைப் பயின்று அறியவேண்டுமென்ற உள்ளத் தோடு, முதல் நூல்களையும் அவற்றின் உரைகளையும் நாடி கிற்கின்றமையின், இவை அதிகமாக வளர்ச்சியுற வில்லை. அத்துடன் இவருடைய சமயக் கொள்கை உயர்ந்த நிலையிலே போற்றப்பட்டமையின், சாதாரண சைவசமயிகளுங்கூட இவருடையதைப் பின்பற்ற முடிய வில்லை. இவருடைய நடை பற்றித் திரு. செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் காட்டிய மேற்கோளயே நானும் காட்டி அமைகின்றேன்: 'அன்பானது, குடத்துள் விளக்கும் உறையுள் வாளும் போல ஒருவர் காட்டக் காணற்பாலதன்று; அவ்வன்புடைமையால் வெளிப்படும் செயல்களைக் கண்ட வழி, இவை உண்மையால் இங்கே அன்பு உண்டு, என்று அநுமித்துக் கொள்ளற் பாலதாம். (பெரியபுராணம், சூசனம். செய். பக். 128): 1. தமிழ் வியாசங்கள் பக். 13. 2. History of Tamil Prose, P. 48.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/189&oldid=874461" இலிருந்து மீள்விக்கப்பட்டது