பக்கம்:தமிழ் உரை நடை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தமிழ் உரை நடை வேண்டுவதற்குப் பயன்படுவது உரைநடை என்பது கன்கு தெரிகின்றது. ஆனல், பாட்டு அத்தகையதன்று: உள்ளது சிறத்தலோடு கவிஞனுடைய கற்பனையும். கலந்து எதுகை மோனேகள் விரவப் பாடுவதாகும். சங்க காலப் பாடல்களில் அத்துணை எதுகை மோனேகளைக் காண இயலாது. அக்காலப் புலவர்கள் வெறுஞ்சொல் லடுக்குகளைக்கொண்டு பாட்டிசைக்காது பொருளுக்கே ஏற்றம் தந்தவர்கள். ஆகவேதான் அவர்தம் பாடல்கள் பெரும்பாலும் உரைநடை ஒத்து, ஆசிரியப்பாவிலேயே அமைந்தனவாகி, எடுத்த பொருளை விளக்கும் திறத்தில் அமைந்து நிற்கின்றன. எனினும் அவை பாடல்களே. தொல்காப்பியத்தில் பல குத்திரங்கள் பா, பாவினம். பற்றி விளக்கிக் காட்டுகின்றன. இந்த விளக்கங்களே நோக்கும்போது கடைச் சங்க காலத்துக்கு நெடுநாட் களுக்கு முன்னரே பாக்கள் தமிழில் விரவி இருக்க வேண்டும் என்பது நன்கு தெரிகின்றது, எனினும், அதற்கு முன்பே தமிழில் உரைநடை சிறந்திருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியுங்கொல்? உரைநடைதானே மொழியின் முதல் வளர்ச்சி! தமிழ்ப் பாவிற்கு இலக்கணம் காணும்போது உரை கடைக்கு ஏன் இலக்கணம் காணவில்லை என்ற ஐயம் தோன்றக் கூடும்? பேச்சு கடைக்குத் தனித்த இலக்கணம் தேவையோ இயல்பாக உள்ளதை உள்ளவாறே பேசியும் எழுதியும் வரும் உரை நடைக்குத் தனித்த இலக்கணம் தேவை இல்லையே! பொதுவாக மொழியின் இயல்பு கூறி, அதில் சொற்கள் வழங்க வேண்டிய வகைகளையும், இன்னின்ன சொற்கள் இன்னின்ன பொருள்வழி வழங்க வேண்டும் என்ற மரபு நெறிகளையும், பெயரும், வினையும் இடையும், உரியும் இயைந்து செல்லும் உரைநடை நெறி இத்தகையது என்ற முறை வகைகளையும் விளங்கக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/19&oldid=874462" இலிருந்து மீள்விக்கப்பட்டது